ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம்

ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம், முகில், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 448, விலை 300ரூ.

படிக்க படிக்க தீராத அதிசய பிறவி! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000022658.html இந்த 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில், தன்னை கடவுளாக வழிபடும் ஒரு பெருங்கூட்டத்தையே உருவாக்கி, உலக வரலாற்றை மாற்றியமைத்த வல்லமை பொருந்திய ஒரு தனி நபரின் ஆளுமையையும், வன்மத்தையும் பற்றிய சுவாரசியமான நூல் இது. ஹிட்லர் பற்றி எத்தனை நூல்கள் வரலாற்றில் வந்தாலும் அத்தனையையும் படிக்கத் தோன்றும் அதிசயப் பிறவி அவர். எத்தனை சர்ச்சைகள், எத்தனை குரூரங்கள், எத்தனை சாதனைகள், எத்தனை எத்தனை காதல்கள்… இத்தனையும் ஒரு மனிதனுக்குள்ளா… ஆச்சரியம் கலந்த உண்மைகளை உரக்கச் சொல்கிறது இந்த நூல். ஹிட்லர் பற்றிய சொல்லப்பட்ட சரித்திரத்தின் சொல்லப்படாத பின்புலத்தை இந்த நூல் விவரிக்கிறது. இந்த உலகில் முதன்முதலாக தன்னை வல்லரசாகக் காட்டிக் கொண்ட தேசத்தின் வரலாற்றில் இருந்து இந்த நூல் துவங்குகிறது. கி.மு. 1700ல் வாழ்ந்த ஆதி ஜெர்மானியர்கள் முதல் ஜெர்மனி என்னும் நாடு எப்படி உருவாகியது, அதற்காக ஜெர்மானியர்கள் மேற்கொண்ட யுத்திகளையும் தெளிவாக விளக்கி இருக்கிறது. யூதர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த ஹிட்லர், ஜீவ காருண்யர் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. ஒரு சாமானியன் சர்வாதிகாரியாக மாறி ஆட்சி செய்த விதத்தையும், சர்வாதிகாரத்தில் நம்பிக்கை கொண்ட மக்களையும், சர்வாதிகார ஆட்சிக்கு ஏற்பட்ட முடிவையும் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. எந்த சூழலில் ஒரு சர்வாதிகாரிக்கான தேவை உருவானது என்ற பின்னணியை ஆராய்வதில் துவங்கி, ஹிட்லரின் பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டம் வரை சொல்லப்படாத நிகழ்வுகளுடன் விளக்கி இருப்பதே இந்த நூலின் சிறப்பு. ஹிட்லருக்கு, உலகத்தையே தன் உள்ளங்கைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற தீராத ஆசை இருந்தது. ஹிட்லரை விமர்சிக்கும் விதத்தில், சார்லி சாப்ளின் நடித்து, 1940ல் தி கிரேட் டிக்டேட்டர் என்ற திரைப்படம் வெளியானது. அதற்கு ஐரோப்பிய நாடுகளில் ஹிட்லர் விதித்த தடை, அடிப்படையில் ஹிட்லர் ஒரு ஓவியர், செயின் ஸ்மோக்கர் என பல சுவாரசியமான தகவல்களை நூலாசிரியர் தொகுத்துள்ளார். -பரணி. நன்றி: தினமலர், 22/11/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *