108 திருப்பதிகள் (பாகம் 5)

108 திருப்பதிகள் (பாகம் 5), ப்ரியா கல்யாணராமன், குமுதம் பு(து)த்தகம், பக். 192, விலை 200ரூ.

மகாவிஷ்ணு எப்போதும் இருந்து அருள்பாலிக்கும் 108 திருப்பதிகள் ஒவ்வொன்றுக்கும் நேரில் சென்று தங்கி தரிசித்து அதன் விவரங்களை பக்தர்களுக்காக வழங்கியுள்ளார் ப்ரியா கல்யாணராமன். புண்ணிய ஸ்தலங்களை நேரில் தரிசிக்கும் அனுபவத்தை, இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்குவதாக உள்ளது. இதற்கு முன் வந்த நான்கு பாகங்களைப் போலவே இதுவும் குமுதம் பக்தி ஸ்பெஷலில் தொடராக வந்தபோது பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. காஞ்சிபுரத்தில் திரு நிலாத் திங்கள் தூண்டத் தாரின் தரிசனம், ஒரே இடத்தில் நான்கு திருப்பதி பெருமாள்களும் எழுந்தருளியிருக்கும் திருவூரத்தானின் தரிசனம், பெருமாள் வலது புறத்திலிருந்து இடதுபுறமாக படுத்துக்கொண்டு சின்ன காஞ்சிபுரம் திருவெஃகாவில் அருள்பாலிக்கும் அதிசயம், காசிக்கு சமமான திருப்புட்குழியில் இரண்டு தேவியருடன் காட்சி தரும் விஜயராகவர் தரிசனம், திருவல்லிக்கேணியில் மீசை வைத்த பெருமாளின் அபூர்வ தரிசனம் என்று 12 திருப்பதிகள் பற்றிய விவரங்கள் விரிவாக தரப்பட்டுள்ளன. பெருமாளின் தரிசனங்களை இவரது எழுத்து வழி தரிசிப்பதே தனி அனுபவமாக இருக்கிறது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/6/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *