108 திவ்ய தேச தர்சனம்

108 திவ்ய தேச தர்சனம், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 125ரூ.

திருமாலின் 10 அவதாரங்களைப்பற்றி நூலின் தொடக்கத்தில் கூறும் நாவலாசிரியர் வாசு.இராதாகிருஷ்ணன் பின்னர் 108 வைணவ கோவில்கள் பற்றி விரிவாக எழுதியுள்ளார். இந்த கோவில்கள் எங்கே உள்ளன, அவற்றின் சிறப்புகள் என்ன, எப்படிப் போவது என்ற விவரங்களும் உள்ளன. திருமாலின் 10வது அவதாரமான கல்கி அவதாரம், இந்த கலியுகத்தில் நிகழும் என்று புராணங்கள் கூறுகின்றன. அதுபற்றி இந்த நூலில் காணும் தகவல்- சலியுக கொடுமைகளைத் தீர்க்கத் திருமால் கல்கியாக அவதரிப்பார். இந்தியாவின் வடபகுதியில் சம்பள கிராமம் என்றொரு ஊர் இருக்கும். அவ்வூரில், விஷ்ணுயசஸ் என்றொரு வேத வித்தகர் இருப்பார். அவருடைய மனைவி சுமதியின் கருவில் திருமால் வந்து தங்குவார். 12 ஆண்டுகள் கருவில் இருப்பார். பின்னர் வைசாக சுக்கில துவாதசியன்று அவதரிக்கப்போகிறார். சிறந்த ஆன்மிக நூல்.  

—-

 

குமரி மாவட்டத்தின் பாரம்பரியமும் சில பொது நல வழக்குகளின் தீர்ப்புகளும், ஆர்.எஸ்.லால் மோகன், இன்டாக் (நாகர்கோவில் சாப்டர்) 43 சி, வாட்டர் டேங்க் ரோடு, நாகர்கோவில் 629001, விலை 150ரூ.

இந்தியாவின் தென்புற எல்லையாக அமைந்திருக்கும் குமரி மாவட்த்தில் அமைந்துள்ள பாரம்பரிய சின்னங்கள் பற்றி புத்தகத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது. கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்து கோவில்கள், பழமையான கிறிஸ்தவ ஆலயங்கள், கத்தோலிக்க பாரம்பரிய ஆலயங்கள் பற்றியும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். பாரம்பரிய மசூதிகள், தர்காக்கள் பற்றியும், வைகுண்டசாமி இயக்கம், பண்பாட்டு கலைச்சின்னங்கள், குமரி மாவட்ட கோட்டை, அரண்மனை, சாலையோர கல்மடங்கள், பாரம்பரிய நுண்கலைகள், பழங்குடி மக்களின் பாரம்பரியம் குறித்தும் எளிய நடையில் கூறியுள்ளார். குறிப்பாக குமரி மாவட்டத்தின் பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதற்காக நீதிமன்றத்தில தொடரப்பட்ட பொதுநல வழக்குகளின் தீர்ப்புகளும் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 4/9/2013.

Leave a Reply

Your email address will not be published.