பாரதிதாசன் கவிதைகள்

பாரதிதாசன் கவிதைகள், பாவேந்தர் பாரதிதாசன், D.S. புத்தகமாளிகை, பக். 496, விலை 300ரூ. இந்நுால், பாரதிதாசன் கவிதைகளின் தொகுப்பு. இது பொருளடக்கம், பாரதிதாசனின் வாழ்க்கைக்குறிப்பு, பாரதிதாசன் கவிதைகள் என்றவாறு அமைந்துள்ளது. பொருளடக்கத்தில் பாரதிதாசனது கவிதைகளை, 20 பகுப்புக்களாகப் பிரித்து, அப்பகுப்பில் அடங்கும் கவிதைகளின் முதல் குறிப்பும், பக்க எண்களும் முறைப்படி கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், நாம் தேடும் பாடுபொருளை ஒட்டியோ அல்லது நம் நினைவில் நிற்கும் கவிதை வரிகள் குறித்தோ விரைவாகக் கண்டறிய முடிகிறது. வாழ்க்கைக் குறிப்புகள் என்னும் பகுதியில் ஆண்டுகள் அடிப்படையில், 1891 முதல் […]

Read more

வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள்

வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள், டி.எஸ்.புத்தக மாளிகை, பக். 236, விலை120ரூ. அவ்வையார் படைத்த, 109 வரிகளைக் கொண்ட ஆத்திசூடி, 91 வரிகளை கொண்ட கொன்றைவேந்தன், 30 வெண்பாக்களைக் கொண்ட மூதுரை, 40 வெண்பாக்களை கொண்ட நல்வழி. உலகநாதர் எழுதிய, 13 பாடல்களை கொண்ட உலகநீதி, அதிவீரராம பாண்டியன், ஒரு வரி, இரு வரி, மூன்று வரி பாடல்கள் என பாடிய, 82 பாடல்கள், சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய, 40 வெண்பாக்களைக் கொண்ட, ‘நன்னெறி’ ஆகிய அறநுால்களின் பாடல்களைத் தொகுத்து, அதற்கு கருத்தும், விளக்கமும் […]

Read more

தமிழ்மொழியின் கட்டமைப்பு பண்பு

தமிழ்மொழியின் கட்டமைப்பு பண்பு, சு.சீனிவாசன், தமிழ்ப் பல்கலைக்கழகம், பக். 264, விலை 250ரூ. தமிழ் மொழியின் கட்டமைப்பு – பண்பு உறவுகளை ஆய்வு செய்தல்: ஒரு தகவல் கோட்பாடு அணுகு முறை என்னும் முனைவர் பட்ட ஆய்வேடு, 17 ஆண்டுகளுக்கு முன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் வளர்ச்சித் துறையின் வெளியீட்டு நுாலாக வந்துள்ளது. பேராசிரியர் ராம.சுந்தரம் நெறியாளராக இருந்து வழிகாட்டிஉள்ளார்.கணித அறிவியல் அடிப்படையில் தமிழ் மொழியை நுட்பமாகவும், கட்டமைப்பு நோக்கிலும் ஆய்வு செய்துள்ளார். தமிழின் எழுத்துகள், அதன் வரி வடிவங்கள், ஒலி […]

Read more

உண்டு ஆனால் இல்லை

உண்டு ஆனால் இல்லை, யோகி, தெய்வப்புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக்கூடம், பக். 184, விலை 150ரூ. உலகில் எந்த உயிரும் மனதின் ஆதிக்கத்தில்தான் இயங்குகிறது. மனம் சொன்னால் உடல் சிரிக்க வேண்டும்; மனம் வருந்தினால் அழ வேண்டும்; அதிர வேண்டும்; இப்படி ஒவ்வொரு நகர்வுமே மனதின் கட்டளைப்படியே நடக்கிறது. சஞ்சலத்தில் உழலும் இந்த மனதைச் சமன்படுத்திப் பண்படுத்த பலப்பலவாக ஆன்மிகம், தத்துவம், உளவியல் சார்ந்த நுால்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. அவற்றுக்கிடையே பலவகையிலும் வேறுபடும் நுால்களில்  ஒன்று. ஒருவருக்கு நன்மை தரும் ஒன்று, இன்னொருவருக்கு இழப்பாக […]

Read more

தலித் இலக்கியம் ஒரு பார்வை

தலித் இலக்கியம் ஒரு பார்வை, முனைவர் பத்மாவதி விவேகானந்தன், ராஜன் வெளியீடு, பக்.224, விலை 140ரூ. தலித்தியமும், பெண்ணியமும் சமத்துவத்திற்கான தத்துவங்களாகும். காலம் காலமாக அடங்கிக் கிடந்தவர்கள் இன்று வெடித்துப் போராட்ட களத்தையும், எழுத்து ஆயுதத்தையும் பயன்படுத்தி அடிமைச் சிறையில் இருந்து வெளிவரத் துடிக்கின்றனர். கடந்த, 20 ஆண்டுகளாக, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தலித் படைப்பாளிகள், கவிதை, சிறுகதை, நாவல், தன் வரலாறு, திறனாய்வு, தத்துவம் என, அனைத்துத் துறைகளிலும் அறிவாற்றல் மிக்கப் படைப்புகளைத் தந்து சாதனை புரிந்து வருகின்றனர். உறங்கிக் கிடக்கும் […]

Read more

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம், இந்திரா சவுந்தர்ராஜன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 272, விலை 150ரூ. காலத்தால் அழிந்திடாத வெகு சில நுால்களில் மகாபாரதமும் ஒன்று. மானுடத்தின் மலிவான சங்கதிகளில் இருந்து, தெய்வீகத்தின் உன்னதம் வரை சகலத்தையும் இது தன் வசம் கொண்டிருக்கிறது. ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், இதன் மூலக்கதை தெரிந்த அளவு, கிளைக்கதைகள் பலருக்கு தெரியவில்லை. பல துணைப்பாத்திரங்கள் அறியப்படாமலேயே வியாசரின் மூல நுாலில் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களையும் பிரபலப்படுத்தி இருக்கிறது இந்த நுால். இதைப் படித்து முடிக்கையில், […]

Read more

கடவுள் கனவில் வந்தாரா?

கடவுள் கனவில் வந்தாரா?, பட்டுக்கோட்டை பிரபாகர், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 192, விலை 170ரூ. வெகுஜன எழுத்துலகத்துக்கு நன்கு பிரபலமானவர் பட்டுக்கோட்டை பிரபாகர். துப்பறியும் நாவல்கள் எழுதுவது அவருக்கு கைவந்த கலையாக இருந்தாலும், சிறுகதையிலும் அதே தரத்தையும், தனித்துவத்தையும் வெளிப்படுத்துகிறார். அந்த வகையில் ‘கடவுள் கனவில் வந்தாரா?’ சிறுகதை தொகுப்பிலும் வாசகனை கதைக்கு நெருக்கமாக அழைத்துச் செல்கிறார். ஒவ்வொன்றும் குடும்ப உறவுகள், காதல், சமூகம் பற்றிய கதையாக இருப்பினும், இன்றைய நடைமுறை மற்றும் இளைய தலைமுறையினரின் உலகத்தை அப்படியே படம் பிடித்து யதார்த்தத்தின் […]

Read more

திருக்குறள் விளக்கம் (திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்)

திருக்குறள் விளக்கம் (திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்), விளக்கவுரை: கிருஷ்ணாம்பேட்டை கி.குப்புசாமி முதலியார்; பதிப்பாசிரியர்: ஜெ.மோகன், இரண்டு பாகங்கள்,வெளியீடு: சிவாலயம்,பக்.1735, விலை ரூ.1800 (இரண்டு பாகங்களும்). திருக்குறளின் அறத்துப்பால் பொருட்பால், காமத்துப்பால் மற்றும் அறத்துப்பால் தொகுப்புரை ஆகிய நான்கு பகுதிகள் – இரண்டு பாகமாகப் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. பரிமேலழகர் உரைக்கு விரிவான விளக்கவுரை தந்தவர்களுள் வேதாந்த நோக்கில் உரை வகுத்தவர் கோ.வடிவேலு செட்டியார். சித்தாந்தம் திங்களிதழின் ஆசிரியரான, கி.குப்புசாமி முதலியாரோ சித்தாந்த நோக்கில் திருக்குறளை அணுகியிருக்கிறார். மிகச்சிறந்த உரை விளக்கம் மட்டுமல்ல, மிக எளிமையான உரையும்கூட […]

Read more

கேணி

கேணி, கோபால்தாசன், நீலம் பதிப்பகம், பக்கம் 120, விலை.120ரூ. கேணி கவிதை தொகுப்பு, கவிஞர் கோபால்தாசன் சிந்தனையின் ஊற்று . பல்வேறு பத்திரிகைகளில் அவர் எழுதிய கவிதைகளை தொகுத்து நூலாக தந்திருக்கும் கோபால்தாசன் கற்பனை வளமிக்கவர் என்பதற்கு இந்த தொகுப்பு ஒரு சான்றாகும். எழுகின்ற கற்பனையை எழுத்தில் அவர் கோர்த்திருக்கின்ற விதம் வாசிப்போரை நேசிக்க வைக்கும் என்றால் அது மிகையில்லை. கவிதை என்பது வாழ்வின் பிம்பம். காலத்தின் கண்ணாடி. மொழியின் சுவை, என்பதை இவரின் ஒவ்வொரு கவிதைகளிலும் கண்டு கொள்ள முடிகிறது. வாழவைக்கும் பண்டிகை என்ற […]

Read more

தமிழ்ப் புதினங்களில் பிறழ்வுநிலை வெளிப்பாடுகள்

தமிழ்ப் புதினங்களில் பிறழ்வுநிலை வெளிப்பாடுகள்,  த.கண்ணன், பல்லவி பதிப்பகம், பக். 206, விலை ரூ.155. நூலாசிரியரின் முனைவர் பட்ட ஆய்வேடு நூலாகியுள்ளது. லக்ஷ்மியின் ‘கூண்டுக்குள்ளே ஒரு பச்சைக்கிளி‘, ராஜம் கிருஷ்ணனின் ‘மலர்கள்‘ வாஸந்தியின் ‘மனிதர்கள் பாதி நேரம் தூங்குகிறார்கள்‘, எம்.வி.வெங்கட்ராமின் ‘காதுகள்’ ஸ்டெல்லாபுரூஸின் ‘மாயநதிகள்‘, ஜெயமோகனின் ‘கன்னியாகுமரி’ ஆகிய புதினங்களின் கதாபாத்திரங்கள் எவ்வகையான மனநோய் பாதிப்புக்கு உள்ளானவர்களாக இருக்கிறார்கள் என்பதை இந்நூல் ஆராய்கிறது. மனநோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் – பதற்றம், மனச்சிதைவு, பாலியல் கோளாறுகள், ஆளுமைக் கோளாறுகள் போன்றவை ஏற்படுவதற்கான காரணங்கள் விரிவாக இந்நூலில் […]

Read more
1 2 3 4 5 6 9