இன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள்

இன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள், உளவியல் நிபுணர் நளினி சந்திரசேகரன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 50ரூ. குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும், எப்படி வளர்த்தால் அவர்களுடைய எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும் என்று இந்த நூலில் விளக்கியுள்ளார், உளவியல் நிபுணர் நளினி சந்திரசேகரன். நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

காமராஜர் ஓர் மகாத்மா

காமராஜர் ஓர் மகாத்மா, டாக்டர் தேனி அ. ஈஸ்வரதாஸ், சஞ்சீவியார் பதிப்பகம், விலை 75ரூ. “படிக்காத மேதை” என்றும், “தமிழகக் குழந்தைகளின் கல்விக்கண் திறந்தவர்” என்றும் போற்றப்படுபவர் காமராஜர். அவர் முதல் – அமைச்சராக இருந்தபோது, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அமல் நடத்தி சாதனை புரிந்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சிறப்பாக எழுதியுள்ளார் டாக்டர் தேனி அ.ஈஸ்வரதாஸ். காமராஜர் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

பத்மினி

பத்மினி, டி.ராமகிருஷ்ணா, தமிழில் பேராசிரியர் சிவ.முருகேசன், சந்தியா பதிப்பகம், விலை 100ரூ. ஆங்கில நாவல் எழுதிய முதல் தமிழர் தமிழ்நாடு, ஆந்திரா ஆகியவை இணைந்திருந்த பழைய சென்னை மாகாணத்தில், 1854-ம் ஆண்டில் பிறந்தவர் டி.ராமகிருஷ்ணா. ஆங்கிலத்தில் நாவல் எழுதிய முதல் தமிழர் இவர்தான். “பத்மினி” ஓர் இந்தியக் காதல் கதை” என்ற இந்த நாவலை 1903-ம் ஆண்டில் (அதாவது 114 ஆண்டுகளுக்கு முன்) அவர் எழுதினார். அதைத் தமிழில் மொழி பெயர்த்தவர் பேராசிரியர் சிவ.முருகேசன். விஜயநகர அரசரைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றும் சலுவா என்பவன், […]

Read more

பாலாற்றங்கரை தெய்வங்கள்

பாலாற்றங்கரை தெய்வங்கள், ப்ரியன், திருவரசு புத்தக நிலையம், பக். 136, விலை 80ரூ. இந்நூலாசிரியர் கல்கிப் பத்திரிகையில் எண்ணற்ற அரசியல் கட்டுரைகள், பேட்டிகள் என்று சுமார் 35 வருடங்கள் எழுத்துப் பணியாற்றியவர். தவிர, ‘கல்கி’ குழுமத்தின் ‘தீபம்’ என்ற ஆன்மிக இதழில் ‘பாலாற்றங்கரைத் தெய்வங்கள்’ என்ற தலைப்பிலேயே, இவர் எழுதிய திருத்தலங்களைப் பற்றிய கட்டுரைகள் வாசகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. அவற்றின் தொகுப்பே இந்த நூல். இந்தியாவில் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதா, கோதாவரி, காவிரிஆகிய ஏழு நதிகள் புண்ணிய நதிகள் என்று […]

Read more

மாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)

மாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்), ஜி.ராஜசேகரன், ரிதா பிரின்ட்ஸ், பக். 128. தமிழகத்தில் முதல் முறையாக போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து, மதுரை போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., ராஜசேகரன் எழுதிய இலவச புத்தகம் இது. மாணவர்களிடையே 2010ம் ஆண்டு முதல், போக்குவரத்து விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தி வருகிறார். இவரின் முயற்சியால் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் போக்குவரத்து விழிப்புணர்வடைந்து, விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கும் பணியில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இன்மையே விபத்துக்கு காரணம். இதனாலேயே விலை மதிப்பில்லா உயிர்களை […]

Read more

இரு துருவங்கள்

இரு துருவங்கள், மதுரை இளங்கவின், காவ்யா, பக். 192, விலை 190ரூ. நம் நாட்டு வருமானம் எல்லாம் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பெரு முதலாளிகளிடம் போய்க் கொண்டே இருக்கிறது. இவர்களால் தான் லஞ்சமும், ஊழலும் நாடெங்கும் நிறைஞ்சிருக்குது. இதைத் தடுப்பது என் லட்சியம் என்று, சிவில் சர்வீஸ் தேர்வு மையத்தில் முதல் நாளே உறுதி கூறும், செல்வின் கலெக்டராக, நேர்மைக்குப் பரிசாக ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒவ்வொரு மாவட்டமாக மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டு அரசியல்வாதிகளால் அலைக்கழிக்கப்படும் யதார்த்தம் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. செல்வினை மணந்து கொள்ள விரும்பும் தொழில் அதிபரின் […]

Read more

தமிழ்த் திருமணம்

தமிழ்த் திருமணம், மாருதி தாசன், நர்மதா பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. துணையை முறைப்படுத்தும் செயலே திருமணமாகும். திருமணம் என்பது உயர்ந்த நெறி; தெய்வீக நெறி. காதல் வயப்படுவது உயிர் இயற்கை. அது கட்டுப்பாட்டுக்குள் இருக்குமாறு செய்யப்படும் சடங்கே திருமணம். காலத்துக்குக் காலம் திருமணச் சடங்குகள் மாறலாம்; நாட்டுக்கு நாடு மாறலாம். ஆயினும், இரண்டு உள்ளங்களின் பிணைப்பே மணம் என்பது உறுதியான ஒன்று. இந்நுால், திருக்கோவில்களில் அர்ச்சகராக பணிபுரிவோருக்கும் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 17/12/2017.

Read more

ஸ்ரீரமண அருள் வெள்ளம்

ஸ்ரீரமண அருள் வெள்ளம், ஸ்ரீதர் – சாமா, விருட்சம் வெளியீடு, பக். 100, விலை 70ரூ. பகவானைப் பற்றிய பல அருமையான தகவல்கள் அடங்கிய நுால். படிப்போரின் ஆன்மிக உணர்வுகள் பெருகும். ‘நீங்கள் என்னை ஒரு உடம்பாகப் பார்க்கிறீர்கள். நான் ஒரே நேரத்தில், 20 லோகங்களில், 20 சரீரத்தில் வசிக்கிறேன்’ என்று சொன்ன ரமணர் ஒரு அதிசய புருஷர். பகவான் அதிசயங்களைப் பெரும்பாலும் தவிர்த்ததுடன் தன் சீடர்களும் அவற்றைப் பிரசாரம் செய்யக் கூடாது என்று எச்சரிக்கை செய்தார். பல அதிசயங்கள் அவர் முன்னர் அரங்கேறின. […]

Read more

காமாலை கல்லீரல் நோய்களுக்கான சித்த மருத்துவம்

காமாலை கல்லீரல் நோய்களுக்கான சித்த மருத்துவம், டாக்டர் ஒய். ஆர்.மானக்சா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 160, விலை 100ரூ. கல்லீரல் என்பது வயிற்றுப் பகுதியின் வலதுபுறத்திலிருந்து இடதுபுறம் வரை பரவிஇருக்கும், மனித உடலின் உள்ளுறுப்புகளில் மிகவும் பெரியது மட்டுமல்ல, இயற்கையாகவே தன்னைத் தானே சரி செய்யக்கூடிய உறுப்புமாகும். கல்லீரலின் செயல்பாடுகள், அதனால் வரும் நோய் நிலைகள், அவற்றை சீர் செய்வதில் நவீன மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்தின் பங்களிப்புகளை விரிவாக விளக்குகிறது இந்நுால். மேலும், கல்லீரல் செயலிழப்பின் சிக்கல்களையும், அதை குணப்படுத்தும் மூலிகைகளையும் […]

Read more

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல், நீ.சீ.சுந்தரராமன், பன்னிரு திருமுறை மன்றம், பக். 208, விலை 100ரூ. விநாயகர் வழிபாட்டில், தமிழ் மூதாட்டி அவ்வை எழுதிய விநாயகர் அகவலுக்கு முக்கிய இடம் உண்டு. விநாயகர் அகவலை தினமும் படித்தால், வாழ்க்கையில் தோல்வியே ஏற்படாது என்பது பக்தர்களின் நம்பிக்கை. விநாயகர் அகவல் தமிழில் இருந்தாலும், அதை புரிந்து கொள்வது கடினம். யோக அடிப்படையில், விநாயகரை பற்றி அவ்வை பாடியுள்ளார். அந்த வகையில், விநாயகர் அகவலுக்கு இந்நுாலில் சிறப்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விநாயகர் அகவல் படிப்பவர்கள், இந்நுாலை படித்தால், விளக்கம் அறிந்து […]

Read more
1 2 3 4 5 9