விவசாயம்

விவசாயம், டாக்டர் வி.ஜி.சந்தோசம், கைத்தடி பதிப்பகம், பக்.148, விலை 140ரூ. விவசாயம் இல்லையென்றால் வாழ்வு இல்லை. விவசாயி என்ற வீரத் திருமகன், விந்தைகள் பல புரிந்து, வியர்வை சிந்தி, உணவிற்கான தானியங்களை உற்பத்தி செய்து, உலக உயிர்களுக்கு உன்னதம் செய்கிறான் என்ற சிறப்பைச் சொல்கிறார் இந்நுாலாசிரியர். உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்கள், மனித வாழ்வில் தினை வகைகளின் பங்கு, உலக அரங்கில் விவசாயத்தின் நிலைப்பாடு, தோட்டக்கலைத் துறையால் விவசாயிகளின் முன்னேற்றம், உழவனின் பெருமை, இயற்கை உரம் தயாரிக்கும் முறை, பனை மர விவசாயம், சொட்டு […]

Read more

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

வீழ்வேன் என்று நினைத்தாயோ?, மாலன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 128, விலை 100ரூ. சிங்கப்பூர் என்றதுமே நம்மில் பலருக்கும் ஒரு அதிநவீன நகரம் தான் நினைவுக்கு வரும். சிங்கப்பூர் சென்று வந்தவர்களிடம் கேட்டால், அங்கு நிலவும் துாய்மை, நவீன வசதிகள் பற்றி வாய் கிழிய கூறுவர். ஆனால், சிங்கப்பூரின் உண்மையான வரலாறு., அங்கு நிலவிய அரசியல் சூழ்நிலைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தக் குறையை போக்கும் வகையில், சிங்கப்பூரைப் பற்றி அனைவரும் தெளிவாக தெரிந்துகொள்ளும் வகையில், ஆசிரியர் மாலன் எழுதியுள்ள புத்தகம் சிறப்பாக […]

Read more

தனிமையில் ஒரு கோயில்

தனிமையில் ஒரு கோயில், என்.நாகராஜன், ஸ்வேதகலா புக்ஸ், பக். 208, விலை 160ரூ. எளிய நடையில் தெளிவான நேரடித்தன்மை கொண்ட, 16 சிறுகதைகளும் இந்நுாலாசிரியரின் கதை சொல்லும் திறனை வெளிப்படுத்துகின்றன. வாழ்க்கைப் பாதையில் காண்பனவும், உணர்வனவும் கதைக்குக் கருப்பொருளாகி இருப்பதை இந்நுால் வெளிப்படுத்தியுள்ளது. ‘தனிமையில் ஒரு கோவில்’ எனும் கதை, கோவிலுக்கு நேர்ந்து கொண்ட ஓர் அனுபவத்தினுாடே மனிதர்களின் மனோபாவங்களைப் படம் பிடிக்கிறது. பேருந்தில் செல்லும் போது நடத்துனர் பாக்கி சில்லரை தராததோடு, அவன் எப்படிப்பட்டவன் என்பதை விளக்கும் கதை, ‘இருளனைத்தும் புலரும்’ என்ற […]

Read more

காலத்தின் வாசனை

காலத்தின் வாசனை, தஞ்சாவூர் கவிராயர், கே.எஸ்.எல்.மீடியா லிமிடெட், பக். 144, விலை 160ரூ. நிற்பதுவே… நடப்பதுவே, திண்ணைகளின் பொற்காலம்! ரயில் என்ன சாப்பிடும்? கொசுவலை கோலாகலம், கைமாற்று வெண்பா, விசிறி வீடு, ஜவ்வாது பூனையும் ரஹீம்பாய் அத்தர் கடையும், வெயில் மனிதர்கள், வளையல்காரர் வராத தெரு, சக்கரவர்த்தியின் ஆவி, காலை பேப்பரும் காபி டம்ளரும், வள்ளலாரைத் தேடிய சி.ஐ.டி., கூஜாவின் கோபம், வீட்டுக்கு வரும் டாக்டர், சந்துகளுக்கும் சரித்திரம் உண்டு’ உள்ளிட்ட சிறுகதைகள், படிக்கும் வாசகரின் மனதில் முத்திரை பதிக்கும் என்பது திண்ணம். நன்றி: […]

Read more

அது ஒரு கனாக்காலம்

அது ஒரு கனாக்காலம், டாக்டர் ஜெ. பாஸ்கரன், மணிமேகலை பிரசுரம், பக். 144, விலை 100ரூ. சில நினைவுகள் காலத்தால் அழியாதவை. இன்று நினைத்தாலும் இனிமையான உணர்வலைகளை உள்ளமெங்கும் தவழ விடுபவை என்பதில் சந்தேகமில்லை. சைக்கிள் விட்ட துள்ளலையும், கல்யாணங்களில் ஆனந்தப்பட்டதையும், பெண் பார்த்த அப்பாவித் தனத்தையும், வாழைப்பூ வடை சாப்பிட்ட நாக்கு ரசனையையும், துபாய் அனுபவிப்பையும், லண்டனில் படித்ததையும், அகஸ்தியர் கோவில் அமைப்பையும், அம்மாவின் அரவணைப்பையும், சினிமா மோகத்தையும் நினைவுகூர்வதாக அமைந்துள்ளது இந்நுால். நன்றி: தினமலர், 30/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

முத்திரை சிறுகதைகள்

முத்திரை சிறுகதைகள், தொகுப்பாசிரியர் கி.ராமசுப்பு, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 156, விலை 140ரூ. கதைகள்… மனித வாழ்வின் அனுபவத்தை பூர்த்தி செய்யும் மாபெரும் ஆயுதம்! கதைகள் இல்லா விட்டால்; கற்பனைகள் இல்லாவிட்டால் மனித வாழ்வு வறட்சி கண்டு விடும். தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை, ஆயிரமாயிரம் ஆண்டு காலமாகவே கதை கேட்டே வளர்ந்த சிறப்புடையது. தாத்தா – பாட்டி, கூத்து, நாடகம், புத்தகம், சினிமா… என எந்த வழியிலாவது கதைகள் நம்மை வந்தடைந்து கொண்டிருந்தன. ஆனால் இப்போது… கூத்தும், நாடகமும் காணாமல் […]

Read more

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

வீழ்வேன் என்று நினைத்தாயோ?, மாலன், கவிதா பப்ளிகேஷன், பக்.128, விலை ரூ.100. பத்திரிகையாளர், விமர்சகர், இலக்கியவாதி என பன்முகத் தன்மை கொண்ட மாலன் "தினமணிகதிரில் தொடராக எழுதியபோதே பெருவாரியான வாசகர்களால் மிகவும் ;நேசித்து வாசிக்கப்பட்ட கட்டுரைகள் தற்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது லீ காங் சியான் புலமைப் பரிசிலைப் பெற்ற மாலன் சிங்கப்பூரில் தங்கியிருந்து இந்தநூலை எழுதியதாக நூலின் முகப்புரையில் குறிப்பிட்டிருந்தாலும், அவருக்கும் சிங்கப்பூருக்குமான தொடர்பு என்பது இதயத்திலிருந்து எழுத்து வழியாகவே வெளிப்பட்டிருப்பதை நூல் வெளிப்படுத்துகிறது/ நூலில் இடம் பெற்ற 20 கட்டுரைகளும், தலைப்பு முதல் […]

Read more

தமிழக வரலாற்றில் பெரம்பலூர்

தமிழக வரலாற்றில் பெரம்பலூர்,  ஜெயபால் இரத்தினம், விச்சி பதிப்பகம், பக்.572, விலை ரூ.700.  255, பெரம்பலூர் வட்டாரத்தின் வரலாற்றைச் சொல்லும் இந்நூலில், முதலில் பெரம்பலூர் பகுதியின் நிலவியலமைப்பு விவரிக்கப்படுகிறது. பழைய கற்காலத்திலேயே பெரம்பலூர் வட்டாரத்தில் மக்கள் பரவி வாழத் தொடங்கிவிட்டதையும், புதிய கற்காலம் மற்றும் பெருங்கற்படைக் காலங்களில் ஊர்கள் உருவாகிவிட்டதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. சங்க காலத்தில் இவ்வட்டார நிலப்பரப்பில் விச்சி, கண்டீரம் மற்றும் பிடவூர் ஆகிய மூன்று குறுநில அரசுகள் அமைந்திருந்தன, எஞ்சியுள்ள பகுதிகள் மலையநாட்டின் ஒரு பகுதியாகவும், சோழ நாட்டின் ஒரு […]

Read more
1 6 7 8