தமிழ்ச் சான்றோர்கள்

தமிழ்ச் சான்றோர்கள், ஆர். குழந்தை அருள், செந்தமிழ் பதிப்பகம், பக். 176, விலை 160ரூ. உலக மனித இனத்திற்கே முதல் இனம் தமிழ் இனம். உலக மொழிகளுக்கெல்லாம் முதல் தொன்மையான மொழி நம் தமிழ் மொழி என பெருமைப்பட்டுக் கொண்டாலும், அந்த மொழி வளர்ச்சிக்கு தற்போது கொடுத்துக் கொண்டிருக்கும் வலிமை குறைவே என்றால் அது மிகையாகாது. தமிழ்ச் சான்றோர்கள் எனும் இந்த நுாலில், 21 தமிழ் அறிஞர்களின் வரலாறும், தமிழ் வளர்க்க அவர்கள் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மகா வித்வான் […]

Read more

ஒரு மிடறு பச்சைக் குருதி

ஒரு மிடறு பச்சைக் குருதி, கலைச்சித்தன், விஜயா பதிப்பகம், பக். 136, விலை 120ரூ. அடர் காட்டுக்குள் சலசலத்து ஓடும் சிற்றோடை எழில் வாய்ந்தது மட்டுமல்ல, பிரதிபலிக்கும் கண்ணாடி கவிதை என்பர். ‘முற்றிய பாண்டத்தை பிரித்தெடுக்கிறான்… அறுகிறது மண்ணின் தொப்புள்கொடி. வெம்மை தகிக்கும் நாற்சுவருக்குள் சுட்டெடுக்கிறான்… எரிதழல் கொப்பளிக்கும் இசை தின்ற மண் பொதி கடமென்று சமைகிறது’ என்ற கவிதை, இசை தின்ற மண் பொதி கடமென கவிஞரால் உருவாகின்ற அற்புதத்தை விதைக்கிறது. நன்றி: தினமலர், 7/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026708.html இந்தப் […]

Read more

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல், பேரா. க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 148, விலை 120ரூ. அவ்வையாரின் விநாயகர் அகவல் இசை நயம் மிக்க தோத்திரப் பாடலாகவும், யோக ரகசியங்கள் பொதிந்த சாத்திர நுாலாகவும் உள்ளது. 72 வரிகள் கொண்ட அகவற்பாவுக்கு, ஆசிரியர் பொழிப்புரை, விரிவுரை இரண்டையும் அழகுற அமைத்துள்ளார். அகவுதல் என்றால் அழைத்தல் என்ற பொருளும் உண்டு. இறுதி அடியில், ‘வித்தக விநாயக, உன் மணம் மிக்க திருவடியில் சரண் புகுகிறேன்’ என்று அகவல் முடிகிறது. முதல் இரண்டு வரிகளில் விநாயகரின் திருவடியைச் சிறப்பித்து, இறுதி […]

Read more

தாம்பிரவன்னி மகத்துவம்

தாம்பிரவன்னி மகத்துவம், புலவர் வே.மகாதேவன், இந்து கலாசாரம் மற்றம் இந்தியவியல் ஆய்வு மையம், பக். 121. தாமிரபரணி வரலாற்றை விளக்கும் நுால்களில் இடம்பெறாத சில சிறப்புச் செய்திகள், இந்நுாலாசிரியரால் சொல்லப்பட்டுள்ளது பாராட்டிற்குரியவை. கன்னடியன் கால்வாய் பற்றி கூறியுள்ள வரலாற்று செய்தி (பக்., 50 – 55) முக்கியத்துவம் பெறுகிறது. தோழி தாமிரபரணி என்பதையும், அகத்திய முனிவர் விமானத்தில் பயணித்ததையும், சகலகோடித் தீர்த்தம் தாமிரபரணி என்பதையும் (பக்., 69), இந்த நதியின் மகத்துவத்தை பட்டியலிடுகிறது இந்நுால் நன்றி: தினமலர், 7/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

எல்லா உணவும் உணவல்ல

எல்லா உணவும் உணவல்ல, பாலு சத்யா, விகடன் பிரசுரம், பக். 144, விலை 125ரூ. மனித வாழ்விற்கு உண்ண உணவு முதல் தேவையாகும். உணவு தயாரிப்பதில், உண்பதில் எவ்வளவு கவனம் தேவை என்பதை இந்நுால் மிக அருமையாக விளக்குகிறது. பல உணவுப் பொருட்களையும் வீட்டிலேயே தயாரித்து உண்ண வேண்டும் என்றும், உணவே மருந்தாக நினைத்தால் வியாதிகள் வராது என்றும், உடல் ஆரோக்கியம் பெறத் தேவையான உணவுகளைக் கூறுவதும் இந்நுாலின் சிறப்பாகும். பழைய சோறின் அருமைபெருமைகளை விளக்குவதும், சமோசா வேண்டாம் என்பதற்கான காரணங்களை விளக்குவதும் (பக்., […]

Read more

நமது கச்சத்தீவு

நமது கச்சத்தீவு,புலவர் செ.இராசு, வேலா வெளியீட்டகம், பக். 126, விலை 100ரூ. தன் நாட்டின் நிலப்பரப்பை விரிவாக்கிக் கொள்ள வேண்டுமென்றால், வேறொரு நாட்டுடன் கடுமையாக போரிட்டு கைப்பற்றுவது தான் பண்டைய காலந்தொட்டு நடந்து வருகிறது. ஆனால், இந்திய நாட்டின் பூர்வீக நிலப்பகுதியான ஒரு தீவோ, மிக எளிதாக இன்னொரு தீவு நாட்டிற்குத் தாரை வார்க்கப்பட்ட நிகழ்வு இன்றும் மண்ணின் மைந்தர்களை உறுத்திக் கொண்டிருப்பதன் விளைவே இந்நுால். வளர்ச்சிப்பாதையில் விரைந்து சென்று கொண்டிருந்த இந்தியா, இராமநாதபுர மாவட்டத்துக்குச் சொந்தமான, மீன்வளமும் கனிம வளமும் நிறைந்த கச்சத்தீவை, […]

Read more

வைகைக் கதைகள்

வைகைக் கதைகள், சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலை 600ரூ. வைகை நதியின் சிறப்புப் போல வைகை நதிக் கரையோரம் பிறந்த எழுத்தாளர்களும் வளமை மிக்கவர்கள். அத்தகைய எழுத்தாளர்களில் கவிஞர் வைரமுத்து, வேல ராமமூர்த்தி, இந்திரா சவுந்தரராஜன், நா. பார்த்தசாரதி, தி.சு. செல்லப்பா உள்பட 56 ஜாம்பவான்கள் எழுதிய அற்புதமான கதைகள் பஞ்சாமிர்தம் போல சுவையுடன் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அனைத்துக் கதைகளிலும் மதுரை வட்டார மணம் வீசுவதை அனுபவிக்க முடிகிறது. இந்தக் கதைகளுடன் அவற்றை எழுதிய எழுத்தாளர்களின் முகவரி உள்பட சிறு குறிப்பையும் தந்து இருப்பது பாராட்டத்தக்கது. […]

Read more

சிவாஜி ஆளுமை பாகம் 3

சிவாஜி ஆளுமை, பாகம் 3, மு.ஞா.இன்பா, கைத்தடி பதிப்பகம், விலை 350ரூ. நடிப்புக்காகவே பிறந்த சிவாஜியின் நாடகம், திரையுலக வாழ்க்கை மட்டுமல்ல, அரசியல் பணிகள், தலைவர்களுடன் நட்பு என பல பரிணாமங்களையும் 348 பக்கங்களில் ஆழமாக எடுத்துக்காட்டுகிறது இந்நூல். சிவாஜி பற்றி நாம் அறியாத பல தகவல்களை தேடிக்கண்டுபிடித்து அருமையாக தொகுத்திருக்கிறார் நூலாசிரியர். எம்.ஜி.ஆர். படத்துக்காக தி.மு.க.அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் திரையரங்குகளை அடைத்து போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றிருக்கிறார். எம்.ஜி.ஆர்., சிவாஜி இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி என்பது அனைவருக்கும் தெரியும். […]

Read more

தாமிரபரணி புராணம்

தாமிரபரணி புராணம், கீழாம்பூர், கலைமகள் பப்ளிகேஷன்ஸ், பக்.216, விலை 200ரூ. மகா புஷ்கரம் விழா கண்ட தாமிரபரணி நதிக்குப் பல பெருமைகள் உள்ளன. கரைப் பகுதிகளில் பாடல் பெற்ற சிவன், பெருமாள் கோவில்கள் அமைந்த சிறப்புக்குரியது. இந்த நதிக் கரையில், உலகப் பொதுமறை நுாலுக்கு பிழை திருத்தம் செய்யப்பட்டது மட்டுமன்றி, அகத்தியர் உள்ளிட்ட சித்தர்களும், ஞானிகளும் வாழ்ந்துள்ளனர் என்பது வரலாறு. பாபவிசை தீர்த்த மகிமை, ஐந்து வகை நிலங்களும் தாமிரபரணியும், தாமிரசபை சிற்பங்கள், தாமிரபரணி நதி உற்பத்தி புராணம், நதியோரம் கிடைத்த நாணயங்கள், தாமிரபரணி […]

Read more

களவும் கற்று மற

களவும் கற்று மற, எஸ்.விஜயன், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 75ரூ. சிறுவர் – சிறுமியரின் ரசனைக்கு இயன்றதொரு விருந்தை படைக்கிறது இந்நுால். திசை மாறிய இளைஞனின் தறிகெட்ட சிந்தனையுடனான சாத்வீக பயணத்தை மேற்கொள்கிறது. கதை நெடுக இளைஞனை ஆக்கிரமித்து வரும் கவிதைகளின் பின்னணி பற்றி, இந்நுாலின் இறுதியில் சிறிய குறிப்பைத் தந்துள்ளார் ஆசிரியர். அந்த குறிப்பும், இந்நுாலின் தலைப்புமே, அழகிய வண்ணப்படங்களோடு சிறார்கள் ஐக்கியமாகிட உதவும் திறவுகோல்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 7/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more
1 5 6 7 8