காயமே இது மெய்யடா

காயமே இது மெய்யடா, போப்பு, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.160 நம் உடலின் முதன்மை உள் உறுப்புகளான கல்லீரல், இதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகள், அவற்றைப் புரிந்துகொள்வது எப்படி, மேம்பட்ட வகையில் பராமரிப்பது எப்படி என்று இப்புத்தகம் விரிவாக விளக்குகிறது. காயம் என்பது ஒன்றுமற்றதல்ல; ஊனும் உயிரும் சேர்ந்த உடம்பு. அதை முறையாக வளர்க்கவும் பராமரிக்கவும் தேவைப்படும் வழிகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. நன்றி: தமிழ் இந்து, 15-2-2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030466.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

அயல் பெண்களின் கதைகள்

அயல் பெண்களின் கதைகள், தமிழில்:எம்.ரிஷான் ஷெரிப், வம்சி புக்ஸ், டி.எம்.சாரோன், விலை: ரூ.160 சிங்கள மொழியில் எழுதப்பட்ட ஒன்பது பெண் எழுத்தாளர்களின் கதைகளை சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார் எம்.ரிஷான் ஷெரிப். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான குரல் இந்தக் கதைகளிலிருந்து வெளிப்படுவது குறித்து முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுதான் இந்தத் தொகுப்பைக் கொண்டுவருவதன் நோக்கமாகவும் இருக்க முடியும். இப்படியான தொகுப்பு சாத்தியமாவது இதுதான் முதன்முறை. நன்றி: தமிழ் இந்து, 15-2-2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

நடைவழி நினைவுகள்

நடைவழி நினைவுகள், சி.மோகன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.175 மோகன் தனது ஐம்பது ஆண்டுகால எழுத்து வாழ்க்கையில் சந்தித்த அபூர்வமான ஆளுமைகளைப் பற்றி எழுதிய தொடர் ‘நடைவழி நினைவுகள்’. தமிழின் முதன்மையான எழுத்தாளர்கள் 16 பேர் கலை சார்ந்த ஆளுமைகளாகவும், அவரவர்களுக்கே உரிய பிரத்யேகக் குணங்களோடும் இந்தப் புத்தகத்தில் வெளிப்பட்டுள்ளார்கள். ஒரு வாசகரோடு அந்த ஆளுமைகள் நெருங்கிக் கைகுலுக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் புத்தகம் இது. நன்றி: தமிழ் இந்து,15/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

சமூக நீதிக்கான அறப்போர்

  சமூக நீதிக்கான அறப்போர், பி.எஸ்.கிருஷ்ணனுடன் உரையாடல்:வே.வசந்தி தேவி, சவுத் விஷன் புக்ஸ் வெளியீடு, விலை: ரூ.350 தலித் மக்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளுக்காகப் போராடிய பி.எஸ்.கிருஷ்ணனுடன் இந்திய அரசின் முன்னாள் செயலாளரான வே.வசந்தி தேவி நிகழ்த்திய மிக நீண்ட உரையாடல் இது. 70 ஆண்டுகால வரலாற்றைப் பேசுவதோடு ஒடுக்கப்பட்டோர் மீள்வதற்கான மகத்தான சிந்தனைகளையும் முன்வைக்கும் முக்கியமான நூல். நன்றி: தமிழ் இந்து,15/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தீர்ப்பு

தீர்ப்பு: இந்தியத் தேர்தல்களைப் புரிந்துகொள்ளல், பிரணாய் ராய், தொராய், ஆர்.சொபாரிவாலா, தமிழில்: ச.வின்சென்ட், எதிர் வெளியீடு, விலை: ரூ.399 ஊடகவியலாளர், பொருளாதார வல்லுநர், பட்டயக் கணக்காளர், தேர்தல் முடிவுகளைக் கணிப்பவர் என்று பன்முக ஆளுமை கொண்ட பிரணாய் ராய், தொராய் ஆர்.சொபாரிவாலாவுடன் இணைந்து எழுதிய புத்தகம் ‘தி வெர்டிக்ட்: டிகோடிங் இண்டியா’ஸ் எலெக் ஷன்ஸ்’. 1952 தொடங்கி 2019 தேர்தல் வரையிலான வரலாற்றைப் பற்றிய விரிவான பகுப்பாய்வு நூல் இது. பல்வேறு தரப்பினரது கவனம் ஈர்த்த இப்புத்தகம் இப்போது தமிழில் வெளிவந்திருக்கிறது. நன்றி: தமிழ் இந்து,15/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

கீழடி

கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம், தொல்லியல் துறை வெளியீடு, விலை: ரூ.50 ‘கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்’ நூலைத் தமிழ்நாடு பாடல்நூல் நிறுவனத்தின் நிதி பெற்று தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. இந்த நூலின் விலை ரூ.50 மட்டுமே. எல்லோருக்கும் புரியும்வண்ணம் மிக எளிமையான நடையில் எழுதப்பட்டிருக்கிறது. இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், அரபு உள்ளிட்ட 24 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நன்றி: தமிழ் இந்து,15/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் […]

Read more

அழகிய மரம்

அழகிய மரம், தரம்பால், கிழக்குப் பதிப்பகம், தமிழில்: பி.ஆர்.மகாதேவன், விலை: ரூ.500 ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய இந்திய அறிவுத்தளம் பற்றிப் பேசும்போது பெருமிதமும், சில நூற்றாண்டுகளுக்கு முந்தையதைப் பேசும்போது கீழான பார்வையும் வெளிப்படுவது பொது மனோபாவமாகவே மாறியிருக்கிறது. நிறைய கட்டுக்கதைகளும் பொய்ப்புரட்டுகளும் இந்த வரலாற்றில் கலந்திருக்கின்றன. அங்கே புதையுண்டிருக்கும் உண்மையை வெளியே எடுக்கும் எண்ணத்தோடு களத்தில் இறங்கினார், இந்தியாவின் மிக முக்கியமான காந்தியச் சிந்தனையாளர்களுள் ஒருவரான தரம்பால். அவருடைய இரண்டு முக்கியமான புத்தகங்கள் இப்போது மறுபதிப்பு கண்டிருக்கின்றன. 18-ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி என்னவாக இருந்தது […]

Read more

மில்டன் வாழ்க்கை

மில்டன் வாழ்க்கை, சாமுவேல் சான்சன், தமிழில்: வான்முகில், மீனா கோபால் பதிப்பகம், விலை: ரூ.300 சாமுவேல் ஜான்சன், ஆங்கில இலக்கியத்துக்கு அகராதியியலாளராக மட்டுமின்றி வாழ்க்கை வரலாற்றாசிரியராகவும் பெரும் பங்களித்தவர். 52 கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் ஜான்சனின் திட்டத்தில் 23 மட்டுமே நிறைவேறியது. ‘இழந்த சொர்க்க’த்தையும், ‘மீண்ட சொர்க்க’த்தையும் எழுதிய ஜான் மில்டனின் வாழ்க்கை வரலாறு அவற்றில் புகழ்பெற்றது. ஆங்கிலப் பேராசிரியரான வான்முகில், கிரந்த எழுத்துகள் தவிர்க்கப்பட்ட தனித்தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நன்றி: தமிழ் இந்து, 15-2-2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

புகழ் பெற்ற கடற்போர்கள்

புகழ் பெற்ற கடற்போர்கள், வி.என்.சாமி, வில்லாபுரம், விலை: ரூ.600 கடற்படை எப்போது தோன்றி வளர்ச்சி பெற்றது, இந்தியாவின் கடற்படை வரலாறு எப்படிப்பட்டது என்பதில் தொடங்கி போர்க் கப்பல், கடற்போர் பற்றிய பின்னணி என விரிவாக எழுதியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமி. வரலாற்றில் முதல் கடற்போர் பற்றியும், தமிழக வரலாற்றில் கடற்போர் பற்றியும் எழுதியிருப்பதும், உலகின் புகழ் பெற்ற கடற்போர்களைப் பற்றிய தகவல்களும் சுவாரஸ்யம் கொண்டிருக்கின்றன. நன்றி: தமிழ் இந்து, 15-2-2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம், மயிலன் ஜி சின்னப்பன், உயிர்மை பதிப்பகம், விலை: ரூ.250 இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவரும், மூளை-தண்டுவட அறுவைச்சிகிச்சை மருத்துவருமான மயிலன் ஜி சின்னப்பன் எழுதியிருக்கும் மருத்துவத் துறை சார்ந்த நாவல் இது. இளம் மருத்துவர் ஒருவரின் தற்கொலையில் தொடங்குகிறது இந்த நாவல். அந்த இறப்பைப் பற்றி மருத்துவத் துறையின் வெவ்வேறு படிநிலைகளில் பணிபுரியும் வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு கதைகளைச் சொல்கிறார்கள். ஒன்றுக்கொன்று தொடர்புடைய, ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிரான இந்தக் கதைகளால் துப்பறியும் நாவலுக்கான பாணியை இந்நாவல் பெற்றுவிடுகிறது. அந்த மர்மத் தன்மையினூடாக […]

Read more
1 2 3 4 5 6 8