தமிழில் திணைக்கோட்பாடு

தமிழில் திணைக்கோட்பாடு, டாக்டர் எஸ். ஸ்ரீகுமார், வெளியீடு: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை – 98, பக்: 126, விலை: ரூ. 80.

இன்றைய இலக்கியக்களை நவீனத்துவம், பின்நவீனத்துவம், பின்காலனியம் என்று பல்வேறு கோட்பாடுகளுடனும் புதிய புதிய சொல்லாடல்களுடனும் சேர்த்துப் பார்க்கும் காலம் இது. இதன் தொடர்ச்சி அல்லது வளர்ச்சி தமிழ்ச் சூழலையும் தமிழிலக்கியத் திறனையும் புரிந்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. தமிழ் நிலப்பரப்பிலிருந்து தமிழ் இலக்கியங்களை உணர வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது அல்லது ஒதுக்கி வைத்துவிட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. தமிழ் நிலப்பரப்பில் இருந்து தமிழ் இலக்கியங்களை உணர வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அதனைத்தான் ‘தமிழில் தினைக் கோட்பாடு என்று ஆசிரியர் பேசுகிறார். தமிழ்மண் சார்ந்த திணைகோட்பாட்டைத் தமிழ் இலக்கியக் கோட்பாடாக முதன்மைப்படுத்தியிருக்கிறார். தமிழ் இலக்கியம் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு மாற்றங்களை உள்வாங்கி வளர்ந்து வந்திருக்கிறது என்பது போன்ற கட்டுரைகள் ஆய்வாளர்களுக்குக் உதவக்கூடியவை.   நன்றி: குமுதம் (20 03.2013). —–    

ஹிட்லரின் கடற்போர் சாகஸங்கள், ஆசிரியர்: தோராளி சங்கர், விலை: ரூ. 300/-, பக்கம்: 488, வெளியீடு: சென்னை புக்ஸ், 58, கிருஷ்ணா நகர், 6 வது தெரு, மடிப்பாக்கம், சென்னை -91, To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-9.html

ஐந்து கோடி பேருக்கும் மேல் கொல்லப்பட்டு, பல கோடி பேர் உடல் உறுப்புகளை இழக்கக் காரணமாக இருந்தது இரண்டாம் உலகப் போர். இந்தப் போருக்கு முழு முதற் காரணமாக இருந்தவர் அடல்ஃப் ஹிட்லர் என்ற ஜெர்மானிய எதெச்சாதிக்காரி. இப்போரின் ஆரம்பத்தில் ஜெர்மானியர் அடுத்தடுத்தப் பெற்ற வெற்றிகளுக்குப் பெருதவியாக அமைந்தது, ‘யூ – படகுகள்’ என்ற நீர்முழ்கிக் கடற்படையே ஆகும். ஹிட்லரால் உருவாககப்பட்ட இந்தச் சிறிய கடற்படைதான், உலகப் பேரரசாக விளங்கிய பிரிட்டனையே ஓட ஓட விரட்டியடித்தது. அதற்கும் நிலைகுலையாத பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சார்ச்சிலே, ‘போர்க்காலத்தில் ஜெர்மனியின் யூ – படகுகளே என்னை மிகவும் அச்சுறுத்தின. அந்தப் பீதியினால் பல இரவுகள் தூங்க முடியாமல் தவித்தேன்’ என்று கூறினார். அந்தலளவுக்குக் கடற்போர் சாகஸங்களை, நார்வே முதல் இத்தாலி வரையிலான ஐரோப்பா கண்டம் முழுவதும் ஹிட்லரின் படைகள் நிகழ்த்தின. அவற்றையெல்லாம் படம் பிடித்துக் காட்டும் இந்நூலாசிரியர், ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றையும், போர் வெறியினால் உலக அளவில் அவர் ஏற்படுத்திய பேரழிவுகளையும், இறுதியில் அவருக்கு நேர்ந்த இழிவான முடிவையும், இதன் மூலம் உலகம் பெறவேண்டிய படிப்பினையியையும் மிக எளிய தமிழில் சுமார் 480 பக்கங்களுக்கு மேல், 18 உப தலைப்புகளில் ஆசிரியர் இந்நூலில் விவரித்துள்ளார். 1965 -ல் முதல் பதிப்பாக வெளியான இந்நூல், சிலதிருத்தங்ளுடன் தற்போது வெளியாகியுள்ளது. நன்றி: துக்ளக் (13.3.2013).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *