முடிவளமும் சரும பொலிவும்

முடிவளமும் சரும பொலிவும், டாக்டர் ஆர். ஞானசம்பந்தம், ஏ.கே.பி. ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி மையம், 6, லாயிட்ஸ் 2 லேன், அவ்வை சண்மகம் சாலை, ராய்பேட்டை, சென்னை 14, விலை 150ரூ. பக்க விளைவே இல்லாத மருத்தவம் ஹோமியோபதி என்பதை ஆணித்தரமாக எடுத்து வைப்பதுடன் பெரும்பாலனவர்களுக்கு ஏற்படும் முடி மற்றும் சருமம் தொடர்பான நோய்களுக்கு காரணம் என்ன? அவற்றை ஹோமியோபதி மூலம் எவ்வாறு முற்றிலுமாக குணப்படுத்தலாம் என்பதை எளிய நடையில் தந்து இருக்கிறார். விளக்கப்படங்களுடனும் ஆதாரங்களுடனும் கொடுத்து இருப்பதோடு மருத்துவ புத்தகம் படிக்கிறோம் என்ற […]

Read more

தமிழில் திணைக்கோட்பாடு

தமிழில் திணைக்கோட்பாடு, டாக்டர் எஸ். ஸ்ரீகுமார், வெளியீடு: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை – 98, பக்: 126, விலை: ரூ. 80. இன்றைய இலக்கியக்களை நவீனத்துவம், பின்நவீனத்துவம், பின்காலனியம் என்று பல்வேறு கோட்பாடுகளுடனும் புதிய புதிய சொல்லாடல்களுடனும் சேர்த்துப் பார்க்கும் காலம் இது. இதன் தொடர்ச்சி அல்லது வளர்ச்சி தமிழ்ச் சூழலையும் தமிழிலக்கியத் திறனையும் புரிந்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. தமிழ் நிலப்பரப்பிலிருந்து தமிழ் இலக்கியங்களை உணர வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது அல்லது ஒதுக்கி வைத்துவிட்டுப் […]

Read more