முடிவளமும் சரும பொலிவும்

முடிவளமும் சரும பொலிவும், டாக்டர் ஆர். ஞானசம்பந்தம், ஏ.கே.பி. ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி மையம், 6, லாயிட்ஸ் 2 லேன், அவ்வை சண்மகம் சாலை, ராய்பேட்டை, சென்னை 14, விலை 150ரூ.

பக்க விளைவே இல்லாத மருத்தவம் ஹோமியோபதி என்பதை ஆணித்தரமாக எடுத்து வைப்பதுடன் பெரும்பாலனவர்களுக்கு ஏற்படும் முடி மற்றும் சருமம் தொடர்பான நோய்களுக்கு காரணம் என்ன? அவற்றை ஹோமியோபதி மூலம் எவ்வாறு முற்றிலுமாக குணப்படுத்தலாம் என்பதை எளிய நடையில் தந்து இருக்கிறார். விளக்கப்படங்களுடனும் ஆதாரங்களுடனும் கொடுத்து இருப்பதோடு மருத்துவ புத்தகம் படிக்கிறோம் என்ற மலைப்பே தெரியாத வண்ணம் எழுதி இருப்பதை பாராட்டலாம். நன்றி: தினத்தந்தி, 21/8/2013.  

—-

 

ஹிட்லரின் கடற்போர் சாகஸங்கள், தோராளி சங்கர், சென்னை புக்ஸ், பக். 488, விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-9.html

இரண்டாம் உலகப் போரில் அதிகம் பேசப்பட்ட நபர் அடால்ப் ஹிட்லர். கொடுங்கோலன், உலகத்தை தன் கீழ் கொண்டு வர ஆசைப்பட் போர் வெறி கொண்ட ஹிட்லரை, இந்த நூலாசிரியர் வேறு ஒரு கோணத்தில் நமக்கு அறிமுகம் செய்கிறார். இந்த வித்தியாசமான சர்வாதிகாரியின் போர்ப் படைகளில், கடற்படையும் ஒன்று. அதன் மூலம் அவர் செய்த சாகசங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இரண்டாம் உலகப் போர் பற்றிய அனைத்து விவரங்களும், அனேகமாக இந்த நூலில் காணப்படுகின்றன. போர் பற்றிய வரலாற்று குறிப்புகளை தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு, இந்த நூலில் நிறைய விஷயங்கள் உள்ளன. தகவல்களை தொகுத்து வழங்க ஆசிரியர் மேற்கொண்டுள்ள முயற்சியும் சிரத்தையும் பாராட்டுக்குரியன. நன்றி: தினமலர், 28/7/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *