வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள்
வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள், அரிமதி தென்னகன், பைந்தமிழ் பதிப்பகம், 17, டாக்டர் சுப்ராயன் நகர், 6வது தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 87ரூ.
அறநூல்களான அவ்வையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, உலகநாதர் தந்த உலகநீதி, அதிவீரராம பாண்டியர் அளித்த வெற்றி வேற்கை, சிவப்பிரகாச சுவாமிகளின் நன்னெறி ஆகிய 7 நீதி நூல்களின் விளக்கத்தை குழந்தைகளுக்கும் புரியும் வகையில் எளிய, இனிய சொற்களை கொண்டு புலவரேறு அரிமதி தென்னகன் தந்துள்ளார். அறநூல்களின் அர்த்தம் அனைவருக்கும் புரியும் வகையில் இந்த புத்தகம் அமைந்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் இது பயன்படும்.
—–
காத்திருந்த கண்களே, பெருமாள்பட்டி கவிஞர் அடைக்கலம், மனோகரன் பதிப்பகம், 515, பெருமாள்பட்டி கவிநாடு மேற்கு, அகரப்பட்டி அஞ்சல், புதுக்கோட்டை மாவட்டம், விலை 50ரூ.
பொருள் பொதிந்த புதுக்கவிதைகள் கொண்ட புத்தகம்.
—–
மூன்றாம் குழந்தை, சு. மயில்வேலன், எண் 52, வீரமாமுனிவர் வீதி, டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர், புதுச்சேரி 9, விலை 150ரூ.
காதல், கல்வி, குழந்தை, வறுமை, தீவிரவாதம், பெண்ணியம், வரதட்சணை என்று பல்வேறு தலைப்புகளில் அழகான கவிதைகளின் தொகுப்பு. முதலில் மது கசக்குமடா பின்பு அது இனிக்குமடா முடிவில் மரணம் பரிசாக கிடைக்குமடா என்ற வரிகள் மூலம் மதுவின் தீமைகளை உணர்த்தியிருப்பது அருமை. இளைஞர்களுக்கும் கவிதை ஆர்வம் உள்ளவர்களின் கைகளுக்கும் மூன்றாம் குழந்தையை நவீன குழந்தையாக தவழும் வகையில் படைத்துள்ளார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 20 பிப்ரவரி 2013.