ஆனந்த விநாயகர்

ஆனந்த விநாயகர், பாலமோகந்தாஸ், தமிழில்: திவாகார், பழனியப்பா பிரதர், 25, பீட்டர்ஸ்சாலை, சென்னை – 600014, பக். 256, ரூ. 195.

விநாயகரின் பல்வேறு பெயர்கள், விநாயகர் உலகுக்கு வெளிப்பட்ட மாறுபட்ட கதைகள், புராணங்களில் விநாயகர் குறித்த விவரங்கள், விநாயகரும் புராண நாயகர்களும், விநாயகரின் திருமணக்கோலமும், மூஞ்சூறு வாகனம் அமைந்த விதம், தோப்புக்கரண பிரார்த்தனைகள், தமிழகம், இந்தியா மட்டுமல்லாது, உலகெல்லாம் விநாயகருக்கு இருக்கும் கோயில்கள் குறித்த விவரங்கள், அஷ்டோத்திரம், ஏசுவிம்சதி நாமாவளி, தச அட்சர மந்திர ஸ்தோத்ரம், கணேச அஷ்டகம், கணநாயக அஷ்டகம், சாலீஸா, ஸுக்தம், ஸ்தவம் எனப் பல்வேறு தோத்திரங்களும் அடங்கிய சிறப்பான தொகுப்பு நூல். ருண்டுராஜ புஜங்கப்ரதாய ஸ்தோத்ரம் போன்ற அரிய தோத்திரங்கள் நூலின் பலம். விநாயகரின் 32 வடிவங்கள் குறித்த விளக்கங்கள், தகுந்த விளக்கப்படங்கள், விநாயகருக்குகான 58 அணிகலன்களின் விவரம் படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளதும் சிறப்பு. தெலுங்கு மூலத்தில் இருந்து தொகுக்கப்பட்ட நூல் ஆயினும், நல்ல தமிழ் நடை, இருப்பினும், சில சம்ஸ்கிருத சுலோகங்கலுக்கு தமிழ் விளக்கங்களும், தமிழ் தோத்திரங்களூம் இணைக்கப்பட்டிருந்தால், மிகச் சிறந்த தொகுப்பாக இருந்திருக்கும்.  

இலக்கியம் ஈந்த தமிழ், கா. அப்துல்கஃபூர், நன்னெறிப் பதிப்பகம், எண். 17 – 18 பி, பாறையாடித் தெரு, அஞ்சுவன்னம், திருவிதாங்கோடு, கன்னியாகுமரி மாவட்டம் – 629174, பக்.144, ரூ. 50.

  நன்றி: தினமணி (1.4.2013).

 —

 

நரிகுறவர்கள், கரசூர் பத்மபாரதி, தமிழினி, கன்னிமாரா நூலகம், பக்கம்: 270.

நாகரிகமற்ற நிலை, உடல் துர்நாற்றம், சுத்தமில்லாத ஆடை, இவையெல்லாம் தான் நரிக்குறவர்களை பற்றிய நம் பிம்பங்களாக இருக்கின்றன. ஆனால், சுறுசுறுப்பு, கடின உழைப்பு, கூடி மகிழும் இயல்பு, பொறுமை, இருக்கும் சுழலில் இன்புற்று வாழும் பிடித்தமான செயல்கள், கலாசாரத்தை கட்டி காக்கும் பண்பு என, நரிக்குறவர்களின் உலகம் முற்றிலும் வேறானது. இந்தநூலில், நரிக்குறவர் இனமக்களின் வரலாறு மிக விரிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பத்மபாரதி, ஏராளமான நரிக்குறவர் இனமக்களை, பல நாட்கள் சந்தித்து, பேசி அவர்களுடன் தங்கி இருந்து, பல ஆச்சரியமான செய்திகளை, எழுதுகோலால் படம் பிடித்துள்ளார். தமிழக பழங்குடிகள் பற்றிய ஆய்வு, தமிழ் சமூகத்தின் தள பார்வையோடும், கூடிய மீட்ருவாக்கத்திற்கும், ஒப்பீட்டிற்கும் உதவ கூடியது. பல இடங்களில் தொலைந்து போன, இடைவெளிகளை, இட்டு நிரப்பும் கூறுகளை, இந்த பழங்குடியினர் கொண்டுள்ளனர். இந்த நிலையில், அவர்களின் இன நிலையில், அவர்களின் இன வரைவியல் குறித்து விவரிப்பதால், இந்த நூல் நம் கவனத்தை கவர்கிறது.   நன்றி : தினமலர் (31.3.2013).    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *