சிலப்பதிகார ஆராய்ச்சி
சிலப்பதிகார ஆராய்ச்சி, பேராசிரியர் வெ.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார், சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, விலை 120ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0001-009-3.html
சிலப்பதிகாரம் பற்றிய ஆராய்ச்சி நூல்களில் மிக முக்கியமானது பேராசிரியர் வெ.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார் எழுதிய இந்நூல் ஆகும். இவர் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர். சிலப்பதிகாரத்தை அணு அணுவாக ஆராய்ந்து இந்த நூலை எழுதியுள்ளார். சிலப்பதிகாரம், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றா? இந்நூலில் பெருங்காவியத்துக்குரிய இலக்கணங்கள் அமைந்து இருக்கின்றனவா? இதனை இயற்றியவர் இளங்கோவடிகளா? அவர் சேரன் செங்குட்டுவனின் தம்பியா? இந்த நூல் சங்க காலத்தைச் சேர்ந்த நூலா… இப்படி பல கேள்விகளை எழுப்பி தமது ஆராய்ச்சி மூலம் பல கேள்விகளை எழுப்பி தமது ஆராய்ச்சி மூலம் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார் நூலாசிரியர். தன் வாதத்துக்கு வலுவூட்ட, பழம் பெரும் நூல்களில் இருந்து ஆதாரங்களை எடுத்துக்காட்டுகிறார். சிந்தனைக்கு விருந்தளிக்கும் நூல். ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடிய நூல். நன்றி: தினத்தந்தி, 24/4/2013.
—-
வரும் போலிருக்கிறது மழை, மு. முருகேஷ், அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி, பக். 64, விலை 40ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0001-009-4.html
தன்னைச் சுற்றி இருப்பவை, நடப்பவை எனறு எதையும் விட்டுவிடவில்லை முருகேஷ். அத்தனையையும் தன் கவிதைப் பொருளாக்கியுள்ளார. அதுவும் ஹைக்கூ, வடிவத்தில். மழைவாசம் தொட்டு, விரிசல் சுவரில் விழும் விதைகள் வளர்வதுகூட அவரது ஹைக்கூ பயணத்தில் அடக்கம். ஆகாயத்தையும் வானத்தையும் அளக்க இவரது கவிதைத் தடம் போதும். அத்தனை விஷயங்கள். படிப்பவர் யாராக இருந்தாலும் அவரையும் அறியாமல், ஒரு ஹைக்கூ நாமும் எழுதிப் பார்ப்போமா என்று தூண்டும் ஒரு தூண்டல் கவிதைகளில் தெறிக்கிறது. தூக்கம் தின்ற இரவு குழாயடியில் இசைக்கும் சொட்…. சொட்… சொட்… நாம் அனுபவித்ததை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் படிமக்காட்சிகள் யாரையும் கவிதைப் ப்ரியராக்கிவிடும். நன்றி: குமுதம், 1/5/2013