கொட்டாரம்
கொட்டாரம், நீல பத்ம நாபன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0001-009-6.html
என்னைப் போல் இருவர், ரவுத்திரம், பகை, நொண்டிப்புறா, பூஜை அறை, கொட்டாரம் என்ற 6 சிறுகதைகளின் தொகுப்பு நூல். வாசகனின் வாசிப்புக்கேற்ப ஊக நிலையைப் படரவிடுவது நூலாசிரியரின் பண்பாகத் திகழ்கிறது. அது வாசக மகிழ்வைப் பெருக்கிடும் சூழலுக்கு வலுவூட்டுகிறது. நீல பத்ம நாபனின் மொழி நடை, சுகமான சிறுகதை தொகுப்பை சுவைக்கலாம்.
—–
ஓர் ஊதாங்குழல் தமிழ் ஊதுகிறது, ஞா. சிவகாமி, மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ.
கருத்துள்ள புதுக்கவிதைகள் கொண்ட நூல். நூலாசிரியர் ஞா. சிவகாமி, அரசு உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். மாரிக்கு ஒரு கவிதை, தொட்டிலில் கிடக்க வேண்டிய குழந்தை குப்பைத் தொட்டியில் பெண் குழந்தை என்பதால் அதை மண் குழந்தை என நினைத்தாளோ அத்தாய் சீச்சீ அவள் ஒரு பேய்.
—-
ஆரோக்கிய வாழ்விற்கு யோக முத்திரைகள், கீர்த்தி, அழகு பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 45ரூ
இந்நூல் மூலம் நோய்களுக்கு மருத்துவம் மட்டுமே தீர்வு ஆகாது என்பதையும், தவறான சுவாசமுறைகளும், உணவு பழக்கமுமே நோய்களுக்கு காரணம் என்பதையும் அறிய முடிகிறது. மனிதனின் உடல் பஞ்சபூதங்களுக்கு தொடர்புடையது என்பது விளக்கப்படுகிறது. 58 யோக முத்திரைகளும், அவற்றை செய்யும் முறையும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 24/4/2013.