அதிசய சாதனையாளர் நிக் வாயிச்சஸ்
அதிசய சாதனையாளர் நிக் வாயிச்சஸ், சேவியர், அருவி, 10, 6வது செக்டர், கே.கே. நகர், சென்னை 78, விலை 100ரூ.
கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகள் இல்லை, இரண்டு கைகள், கால்கள் இல்லாத நிலையில் பிறந்த குழந்தையை (நிக்வாயிச்சஸ்) பெற்றோர் வெறுத்து ஒதுக்கிவிடாமல் வளர்த்து ஆளாக்கி இருப்பதற்கே சபாஷ் சொல்ல வேண்டும். அந்தக் குழந்தையும் வளர்ந்து இன்றைக்கு தன்னம்பிக்கை பேச்சுக்களால் உலகத்துக்கே தன்னம்பிக்கையூட்டி கொண்டிருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது. மனம் வைத்தால் எந்த நிலையிலும் வாழ்வில் வென்று காட்ட முடியும் என்பதற்கு நிவ்யிச்சஸ் உதாரணமாகி நிற்கிறார். அவரது வார்த்தைகள் தன்னம்பிக்கையூட்டும் டானிக்.
—-
எண்ணத்தில் புதுமைகள், வசந்தா இராமநாதன், தமிழன் நிலையம், 5, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 60ரூ.
மனம் தெளிவாக இருந்தால் புதிய புதிய சிந்தனைகள் தோன்றும். புதிய சிந்தனைகள் வாழ்வின் வெற்றிக்கு அடிகோலும். உலகளாவிய கருத்துக்களால் ஏற்படும் மனத் தெளிவால் வாழ்க்கையில் மகத்தான வெற்றி பெற வழி வகுக்கும் என்கிறார் தன்னம்பிக்கை கட்டுரையாளர் வசநத் இராமநாதன்.
—-
சித்தர்கள் அருளிய சிரஞ்சீவி மருத்துவம், ஜெகதா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 24, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ.
நமது உடலில் தோன்றும் அனைத்துவிதமான நோய்களுக்கம் நாமே தயாரிக்கும் வகையில் மருத்துவ முறைகள் கூறப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி 8/5/2013.