பொன்மலர்
பொன்மலர் (சமூக நாவல்), அகலின், தாகம், பு.எண் 34, ப.எண் 35, சாரங்கபாணி தெரு, தி.நகர், சென்னை 17, பக். 194, விலை 80ரூ.
கலைமகள் இதழில் தொடராக வந்து, பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் பாராட்டைப் பெற்ற நாவல், இப்போது புத்தக வடிவு பெற்று, 15ம் பதிப்பாக வந்திருக்கிறது. ரஷ்ய, சீனா, ஆகிய மொழிகளிலும், இந்திய மொழிகளான குஜராத்தி, ஓரிய, மலையாள, கன்னட மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் நாயகி டாக்டர் சங்கரி ஒரு வித்தியாசமான பாத்திரம், நாவல் பிரியர்களுக்கு ஒரு நல்ல விருந்து. நன்றி: தினமலர், 23/10/2011.
—-
வனக்கோயில் (கன்னட நாவல்), ஸ்ரீகிருண்ண ஆலனஹள்ளி (கன்னட மூலம்), ராஜேஸ்வரி கோதண்டம் (தமிழில்), கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, பக். 228, விலை 70ரூ.
அடவி என்ற கன்னட நாவலின் தமிழ் வடிவம்தான் இந்நூல். இதன் முக்கிய கதாபாத்திரமான கிட்டி என்ற சிறுவன் ஹொசூரை அடுத்துள்ள வனம் சார்ந்த கிராமத்திற்கு வளர்ப்புப் பிள்ளையாகச் செல்கிறான். சில கசப்பான நிகழ்வுகளையெல்லாம் கண்டு தன், அத்தையும் இறந்த பிறகு, தன் சொந்த ஊருக்கே அழைத்துச் செல்ல, தாயின் வரவை எதிர்பார்த்து நிற்கிறான் என, நாவல் முடிகிறது. குன்றுகள், வயல்கள், குளங்கள், காடுகள் சூழ்ந்துள்ள ஒரு எளய கிராமத்தின் வாழ்க்கையை எவ்வளவு உள்ளது என்பதைக் கற்பனையைக் கலக்காமல் உள்ளது உள்ளபடி விவரித்திருக்கிறார். சுவையானநூல், -சிவா. நன்றி: தினமலர், 23/10/2011.