விருட்சம் கதைகள்(தொகுதி 1)
விருட்சம் கதைகள்(தொகுதி 1), அழகிய சிங்கர், விருட்சம் வெளியீடு, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-135-6.html
சில சிறுகதைகளை ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் வெளியிடமுடிவதில்லை. அப்படி வெளிவராமைக்கு இதழ் சூழலில் நிறைய காரணங்கள் உண்டு. அதற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு விருட்சம் கதைகள் தொகுதி 1. 1990ஆம் ஆண்டில் வெளியான இத்தொகுப்பு இப்போது இரண்டாம் பதிப்பாக வெளியிகியிருக்கிறது. இக்கதைகள் வெகுஜன இதழில் இடம் பெறாதது. இந்த நூல் 300 பிரதிகள் மட்டுமே 2012 டிசம்பரில் வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அஜீத் ராம் ப்ரேமிளின் அசரீரி கதையை எந்தவொரு வெகுஜனப் பத்திரிகையாலும் வெளியிட முடியாது என்பதற்குப் பல காரணங்களை அடுக்கமுடியும். ஆனாலும் மிகச்சிறந்த கதைகளுள் இதுவும் ஒன்று. அசோகமித்திரன் எழுதிய கடிகாரம் வெகு அற்புதமான கதை. இதை எந்த வெகுஜனப் பத்திரிகையும் மேளதாளத்தோடு வரவேற்ற வெளியிட்டிருக்கும். எல்லா மொழிகளிலும் இடம் பெறக்கூடிய உலகத்தரத்திலான கதை. மா. அரங்கநாதனின் ஏடு தொடங்கல் மெலிதான நகைச்சுவை இழையோடுகிற கதை. தப்புத்தப்பாய்த் திருவாசகம் படிக்கிற சுப்பையாவின் வாசிப்பைக் கேட்டு பிரபஞ்சவெளியில் எங்கோ வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு திருவாதவூர் அலறுவாராம் இப்படியே ஒவ்வொன்றும். விருட்சம் சிற்றிதழில் வெளியான 21 கதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் அழகிய சிங்கர். விரைவில் அடுத்த தொகுப்பை எதிர்பார்க்கத் தூண்டுகிறது. சுப்ர. பாலன். நன்றி: கல்கி, 3/6/2013
—-
திருக்கோளூர் ரகசியங்கள், வ.ந.கோபால தேசிகாசார்யார், அக்ஷரா பப்ளிகேஷன்ஸ், 12, கோவிந்த் ராயல் நெஸ்ட் அபார்ட்மெண்ட்ஸ், 2வது தெரு, 3வது மெயின் ரோடு, கிழக்கு சி.ஐ.டி. நகர், நந்தனம், சென்னை 35. பக். 506, விலை 395ரூ
அக்ரூரரின் பாக்கியம், கடவுளில் கலந்தவள், தாயாக வந்த பக்தை, மாண்டவர் மீண்ட அதிசயம், விதுரரின் விருந்தோம்பல், இரண்டு மாலைகளைக் கொடுத்த தொண்டரடிப் பொடியாழ்வார் என திருக்கோளூர் திருத்தலத்தின் பெருமைகளையும், ரகசியங்களையும் அழகுறத் தந்து அசத்தியுள்ளார் நூலாசிரியர். நன்றி: சக்தி விகடன், 8/1/2013.