தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம்

தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம், பெ. நிர்மலா, அலைகள் வெளியீட்டகம், சென்னை 24, பக். 408, விலை 280ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-8.html

தமிழர்களையும் சிற்பக்கலைகளையும் தனித்தனியே பிரித்துப் பார்ப்பதென்பது இயலாத காரியம். சொற்களில் இலக்கிய வண்ணத்தையும், கற்களில் கலை வண்ணத்தையும் கண்டவர்கள் தமிழர்கள். கோவில் கட்டிட அமைப்பு, சிற்பங்கள் போன்றவற்றை பக்தி, அழகியல் உணர்வு, கலை போன்ற கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்கும் பார்வை உள்ளது. இவற்றையும் மீறி அவற்றில் சமூகத்தின் உளவியல் ரீதியான பால், பாலியல் வேறுபாடுகள் பார்வைகள் எவ்வாறு இருக்கின்றன என்பதை ஆய்வின் மூலம் எடுத்துரைக்கிறது இந்நூல். ஆதிச் சமூகத்தில்இருந்த பெண், ஆணாதிக்க மரபைக் காப்பாற்றவும், புராணக் கதைகளில் காட்சி வடிவமாகவும் அமைக்கப்பட்ட சிற்பங்களில் மூன்றாம் தரமாக்கப்பட்ட அவலத்தை வெளிக்கொணர்கிறார் நூலாசிரியர். மேலும், கோவில் சிற்பங்களை உருவாக்கிய கலை வல்லுநர்கள் அடிப்படையில் ஆணாதிக்க மனநிலையைக் கொண்டவர்களாகவே உள்ளதையும், பெண் சிற்பங்களை உருவாக்குவதில் அவர்கள் தங்கள் வக்கிரங்களை அதிகாரங்களைப் புகுத்தியதையும் மிக நுணுக்கமாக அம்பலப்படுத்துகிறார். கோவில் சிற்பங்கள் பக்தியுடன் வணங்குவதற்கும் பார்த்து ரசிப்பதற்கும் மட்டுமல்ல, அவை பாலியல் மதிப்பீடு என்ற கோணத்தில் ஆய்வு செய்வதற்கும் உரியவை என்பதைத் தெளிவுபடுத்துகிறது இந்நூல். சிற்பங்கள் தொன்மம் பெண்ணியம் ஆகிய மூன்றையும் சேர்த்துப் பார்த்து ஆய்வுப்படுத்தி எல்லாரும் படிக்கும் வகையில் மிக எளிய நடையில் தந்திருக்கும் நூலாசிரியரின் பணி பாராட்டுக்குரியது. நன்றி: தினமணி, 3/6/2013.  

—-

 

ஸ்ரீராகவேந்திர மகிமை (8ஆம் பாகம்), அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், 16/116, டி.பி. கோயில் தெரு, திருமலா ஃப்ளாட்ஸ், ஸ்ரீ ராகவேந்திர மடம் எதிரில், திருவல்லிக்கேணி, சென்னை 5. பக். 504, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-162-4.html

ஸ்ரீ ராகவேந்திரரின் சரிதம், அவதார ஸ்தலத்துக்கான ஆதாரங்கள், மகான் சந்தனம் அரைத்த அக்னீஸ்வரம், கோவாவில் மலர்ந்த மத்வரின் இசை, அமெரிக்கா, ஜெர்மனி, மலேசியா, கோவை, தாளவாடி எனப் பல நாடுகளிலும் ஊர்களிலும் நடந்த மகிமைகள், ஸ்ரீகுரு ராஜரே கட்டிக்கொள்ளும் க்ரந்தாலயம் என குரு ராகவேந்திரரின் மகிமைகளையும் பெருமைகளையும் அற்புதமாக விவரித்துள்ளார் நூலாசிரியர். நன்றி: சக்தி விகடன், 19/3/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *