மௌனியின் கதைகள்
மௌனியின் கதைகள், தொகுப்பாசிரியர்-கி.அ.சச்சிதானந்தம், சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 110ரூ.
உலகத் தரத்துக்கு தமிழில் சிறுகதைகள் எழுதியவர் மௌனி. 1907ல் பிறந்து 1985ல் மறைந்த அவர் எழுதியவை 24 சிறுகதைகள்தான். ஆயினும் அவை சிகரம் தொட்டவை. அதனால்தான் சிறுகதை மன்னர் புதுமைபித்தன் தமிழ் சிறுகதை உலகின் திருமூலர் என்ற மௌனியைப் பாராட்டி இருக்கிறார்.அவருடைய மிகச்சிறந்த 13 கதைகளை தேர்ந்தெடுத்து சாகித்ய அகாடமி வெளியிட்டு உள்ளது. இக்கதைகள், எல்லோருக்கும் எளிதில் புரிந்து விடாது. நிதானமாகவும், பொறுமையாகவும், படிக்க வேண்டும். கடலில் மூழ்கி முத்தெடுப்பதுபோல் கடினமான விஷயம்தான். நன்றி: தினத்தந்தி
—-
வீரபாண்டியன் மனைவி, அரு. ராமநாதன், பிரேமா பிரசுரம், சென்னை 25, விலை 490ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-807-3.html
ஆறு ஆண்டுக் காலம் காதல் மாத இதழில் தொடராக வெளியான வரலாற்று நவீனம் வீரபாண்டியன் மனைவி. இப்போது ஒரே தொகுதியாக வெளியாகியுள்ளது. ஆசிரியர் அரு. ராமநாதன், கல்கியில் குண்டு மல்லிகை என்று ஒரு தொடர் கதையையும் எழுதினார். புகழ்பெற்ற ராஜராஜ சோழன், தங்கப் பதுமை போன்ற திரைப்படங்களுக்கு கதை, உரையாடல் எழுதியவர் இவர். பதினோராம் நூற்றாண்டுத் தமிழக அரசாட்சி முறைகளைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட துன்பியல் கதை இது. வரலாற்று ஆதாரங்களுடன் எழுதப்பட்டது. வீரசேகரன் ஊர்மிளாவின் காதல் வாழ்க்கையைக் குரூரமாக முடித்திருப்பதை ஜீரணிப்பது சிரமம். ஒவ்வோர் அத்தியாயத்தின் தலைப்பிலும் கம்பராமாயணப் பாடல்களின் சில வரிகளைப் பொருத்தமாகத் தந்திருப்பது அன்றைக்குப் புதிய முயற்சி. பிற்காலத்தில் இந்த உத்தியை நா.பா. கையாண்டார். வரலாற்றுக் கதைகளைப் படிக்க விரும்பும் வாசகர்கள் படித்து மகிழலாம். நன்றி: கல்கி, 13/1/13.