மனதைத் திற அறிவு வரட்டும்
மனதைத் திற அறிவு வரட்டும், அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி, அனிதா பதிப்பகம், லியோலேபிள் கட்டடம், இடுவம்பாளையம், திருப்பூர் 641687, விலை 130ரூ.
நூலாசிரியர் அனிதா கு.கிருஷ்ணமூர்த்தியின் தன்னம்பிக்கை ஊட்டும் சிந்தனை மலர்களே மனதைத்திற அறிவு வரட்டும் நூல். மலை உச்சியில் நின்று பார்த்தால் பள்ளங்கள் தெரிவதில்லை. அதுபோல அன்பெனும் சிகரத்தில் நின்று பார்த்தால் குறை எனும் பள்ளங்கள் தென்படாது என்பது போன்ற கவிதைச் சொல்லாடலில் சிந்தனையை விதைக்கிறார் நூலாசிரியர்.
—-
சித்தர்களின் ஜீவசமாதி ரகசியங்கள், கைலாசநாதன், ஸ்ரீஆனந்தநிலையம், 7/14, புதூர் முதல் தெரு, அசோக் நகர், சென்னை 83, விலை 450ரூ.
சித்தர்களின் வரலாறு, அவர்கள் வாழ்ந்த இடங்கள், தற்போது வாழ்ந்து கொண்டு இருக்கும் ஊர்கள் ஆகியவை பற்றியும், மனதையும் உடலையும் எப்பொழுதும் புத்துணர்வாக வைத்துக் கொள்ளும் மூச்சுப்பயிற்சி, நோய்களை போக்கும் ஆசனங்கள் முத்திரைகள், பிரம்மசரியம், சோர்வை தவிர்க்கும், பாலுறவு முறை ஆகியவைபற்றியும் எளிமையான தமிழில் கூறப்பட்டுள்ளது. மேலும் சித்தர்கள் பற்றிய ஆச்சரிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. சித்தர்கள் பற்றிய தகவல் களஞ்சியம் என்று கூறலாம்.
—-
தமிழ் இலக்கண விதிகள், தமிழ்ப்பிரியன், கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ.
பகுபத உறுப்பிலக்கணம், இலக்கண குறிப்புகள், புணர்ச்சி விதிகள் ஆகிய 3 பகுதிகளையும், தெளிவாகப் பயிலவும், மாணவ மாணவியர்கள் தாங்களே தங்கள் திறமைகளை பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொள்ளவும் இந்நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 15/5/2013.