அரச பயங்கரவாதமும் மக்கள் போராட்டமும்
அரச பயங்கரவாதமும் மக்கள் போராட்டமும், கண்மணி, மானுட நம்பிக்கை, 568எ, எட்டாவது முதன்மைச் சாலை, மகாகவி பாரதிநகர், வியாசர்பாடி, சென்னை 39, பக். 385, விலை 170ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-307-2.html
ஈழத்தில் நடைபெற்ற இன அழிப்புப் படுகொலைகளை பட்டியலிடுவதோடு, அதன் வரலாற்றுப் பின்னணியை விளக்கி, ஈழத்துயர் குறித்து தமிழகத்தில் நடந்தேறிய அரசியல் நாடகங்களை தோலுரித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர். தமிழ், தமிழர் உரிமைகள், பண்பாடு, கல்வி, சாதிவெறி, இனஅழிப்பு, முல்லைப் பெரியாறு, மீனவர் கொலை, கச்சத்தீவு தாரை வார்ப்பு, 68 தலைப்புகளில் பிரச்னைகளின் அடி ஆழத்தைப் படிப்போரும் கண்டுணரும் விதத்தில் படைக்கப்பட்டுள்ள நூல். படிக்கப் படிக்க பொதுமைச் சிந்தனையும் புதுமைத் தேடலும் விரிகிறது.
—-
ராஜா ஸாண்டோ, டி.வி. ராம்நாத், பதிப்பாசிரியர்-சு. தியோடர் பாஸ்கரன், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 627001, பக். 120, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-398-3.html
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுதுபவர் எனப் பல பரிமாணங்களில் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்குப் பங்களித்தவர் ராஜா ஸாண்டோ. சில இந்திப் படங்களை இயக்கியவர். இவர் நடித்த இயக்கிய ஒரு படம் கூட இன்று நம்மிடம் இல்லை. பேசாப்படக் காலத்திலும் பேசும்படம் காலத்திலும் பம்பாயிலும் தமிழகத்திலும் சினிமாவிற்குத் தனது பங்களிப்பைத் தந்தவர். பேசும்படம் இதழ் ஆசிரியர் டி.வி. ராமநாத் 1945இல் எழுதிய ராஜா ஸாண்டோவின் வாழ்க்கைக் கதையே இந்நூல். இப்போது வளர்ந்து வரும் திரையியல் ஆய்வுகளுக்கு இந்நூல் உதவும். நன்றி: குமுதம், 1/5/13.