நீதிமன்றத்தில் நீயா, நானா, நாமா?
நீதிமன்றத்தில் நீயா, நானா, நாமா?, டாக்டர் ஏ.ஈ. செல்லையா கல்வி அறக்கட்டளை, ஏபி147, மூன்றவாது பிரதான சாலை, அண்ணாநகர், சென்னை 40, விலை 75ரூ.
திருமண வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு, கணவனும், மனைவியும் விவாகரத்து கேட்டு கோர்ட்டை அணுகுவது அதிகமாகிவிட்டது. இதற்கு தீர்வு காண்பது எப்படி? என்று கேள்வி எழுப்புகிறார் சி. வசந்தகுமாரி செல்லையா அவர் வழக்கறிஞராக இருப்பதால் தான் சந்தித்த பல வழக்குகளை மேற்கோள் காட்டி, பிரச்சினைகளை அலசி ஆராய்கிறார். வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பல்வேறு வழிமுறைகளையும் கூறுகிறார்.
—-
சூளாமணிச் சுருக்கம், அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32 பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், சென்னை 17, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-516-0.html
ஐஞ்சிறு காவியங்களில் ஒன்றான சூளாமணியை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழ் நடையில் சுருக்கமாக தொகுத்து வழங்கியுள்ளார் நூலாசிரியர். சூளாமணியில் தவழும் சொல்வன்மை, சோர்வின்மை, அஞ்சாமை, இன்பம், வீரம் உள்ளிட்ட பல சுவைகள் செறிந்த காவிய நடையை அடிபிறழாமல் அதே இலக்கிய நயத்துடன் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு அடிக்கும் விளக்கம் கொடுத்து இருப்பது சிறப்பம்சமாகும். நன்றி: தினத்தந்தி, 20/3/13.