வானம் தொடு தூரம்தான்
வானம் தொடு தூரம்தான், ஆர்த்தி சி. ராஜரத்னம், பிருந்தா ஜெயராமன், கல்கி பதிப்பகம், 47 என்.பி.ஜவகர்லால் நேரு சாலை, ஈக்காடுதாங்கல், சென்னை 32, விலை 90ரூ.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு அரிய கலை. ஆனால் குழந்தைகளை வளர்ப்பதில் சென்ற தலைமுறைக்கும் இந்த தலைமுறைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்தத் தலைமுறைக் குழந்தைகள் புத்திசாலிகளாகவும், சுட்டிகளாகவும் உள்ளனர். இக்கால குழந்தைகளை எப்படி வளர்ப்பது, எதிர்காலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடியவர்களாக அவர்களை உருவாக்குவது எப்படி என்பதை எல்லாம் இந்த நூலில் ஆர்த்தி சி. ராஜரத்னம், பிருந்தா ஜெயராமன் ஆகிய இருவரும் நுட்பமாகவும், உதாரணங்களுடனும் விளக்கியுள்ளனர். பெற்றோர்களுக்கு இப்புத்தகம் சிறந்த கையேடு.
—-
சகல தெய்வங்களின் காயத்திரி மந்திரங்கள், வேங்கடவன, அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 65ரூ.
எந்த தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் அந்த தெய்வத்திற்கான துதிபாடல்களை, மந்திரங்களை பாடி வணங்குவது சிறப்பு தரும். மந்திரங்களில் சிறந்தது காயத்திரி மந்திரம், ஒவ்வொரு தெய்வத்திற்கும் காயத்திரி மந்திரம் இருக்கிறது. ஒரே தெய்வத்திற்கு ஒன்றுக்கு மேலும், ஒரு தெய்வம் பல தோற்றங்களில் இருந்தால், ஒவ்வொரு தோற்றத்திற்கும் என காயத்திரி மந்திரங்கள் உண்டு. பக்தர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து தெய்வங்களின் காயத்திரி மந்திரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளது இந்நூல்.
—-
பயோடேட்டா, ஆ. மணவாளன், கண்ணம்மா பதிப்பகம், 144, மகாலட்சுமி இல்லம், லாஸ்பேட்டை மெயின்ரோடு, பாக்குமுடையான்பட்டு, புதுச்சேரி 605008, விலை 25ரூ.
இயேசு கிறிஸ்து, நபிகள் நாயகம், சாணக்கியர், அன்னைதெரசா உள்பட 14 பேர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் கொண்ட புத்தகம். இதே புத்தகத்தை, இதே பாணியில் 50பேர், அல்லது 100பேர் கொண்ட புத்தகமாக உருவாக்கலாம். மிகவும் பயன் தரும். நன்றி: தினத்தந்தி.