இந்தியர்களின் போலி மனசாட்சி

இந்தியர்களின் போலி மனசாட்சி, மனுஷ்யபுத்திரன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 175ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-5.html

நாட்டு நடப்பு பற்றி மனதைத் தொடும் வண்ணம் விமர்சனக் கட்டுரைகள் எழுதுவதில் புகழ்பெற்று விளங்கும் மனுஷ்யபுத்திரன் எழுதியு புத்தகம் இது. காவு கேட்கும் சாதி அரக்கன், கமலை எதிர்ப்பது நியாயமா?, நீதியை அழிக்கும் சட்டங்கள், ராஜபக்சே நடத்தும் உளவியல் யுத்தம், வினேதிகளுக்கு விடிவு உண்டா?, மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் இத்தகைய தலைப்புகளில் 40க்கும் மேற்பட்ட கட்டுரைகள். நடுநிலையில் இருந்து பிரச்சினைகளை அலசுகிறார் மனுஷ்யபுத்திரன். இதனால் பிரச்சினைகளை சரியாக அறிந்துகொள்ளவும், நாடு போகிற போக்கை உணர்ந்து கொள்ளவும் முடிகிறது. சரளமான நடை ஒரு பிளஸ் பாயிண்ட். முக்கிய பிரச்சினைகளை நுட்பமாகத் தெரிந்து கொள்ள உதவும் புத்தகம்.  

—-

 

லலிதாம்பிகா அந்தர்ஜனம், கீதா கிருஷ்ணன்குட்டி, சாகித்திய அகாதெமி, குணா பில்டிங், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 28, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-6.html

லலிதாம்பிகா அந்தர்ஜனம் என்ற கேரள மாநில பெண் எழுத்தாளர்களின் எழுத்திலக்கிய வரலாறும், திறனாய்வும் அடங்கிய நூல். 15 வயதில் எழுத்துப் பணியைத் தொடங்கிய லலிதாம்பிகை மிக விரைவிலேயே புகழ் பெற்ற எழுத்தாளர் ஆகியிருக்கிறார். அவரைப்பற்றி கீதா கிருஷ்ணன்குட்டி என்ற ஆங்கிலப் பேராசிரியர் எழுதிய நூலை தமிழில் ஆற்றோட்டமாய் மொழி பெயர்த்திருக்கிறார் பேராசிரியர் அர. சிங்காரவடிவேலன். இந்திய இலக்கிய முன்னோடிகளில் ஒருவரை இந்நூல் மூலம் அறியலாம்.  

—-

 

கவித்தென்றல், கவிஞர் பி. மாரியம்மாள், வாசகன் பதிப்பகம், 11/96, சங்கிலி ஆசாரி நகர், சன்னியாசிகுண்டு, சேலம் 636015, விலை 30ரூ.

கவிதைகளின் நயமும், வார்த்தைகளின் நேர்த்தியும் கருத்தாழமும் கவிஞரின் சமுதாய வேட்கையை காட்டுகிறது. வெறுமனே கிழிபடும் நாட்காட்யின் தாளாயிருக்காமல், சாதனை புத்தகத்தின் தகுதி மிக்க தாளாய் இருப்போம் என்பன போன்ற நம்பிக்கை ஊட்டக்கூடிய நல்ல கவிதைகளை தந்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 31/7/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *