பாண்டியர் காலச் செப்பேடுகள்

பாண்டியர் காலச் செப்பேடுகள், அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408, விலை 300ரூ. To buy this Tamil book onine – www.nhm.in/shop/100-00-0000-811-3.html

இந்த நூலின் ஆசிரியர் டாக்டர் மு. ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்., திருவண்ணாமலை மாவட்டக் கலெக்டராக இருந்தபோது மாவட்டத்தில் உள்ள 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோவில்களில் இருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுகளை, தொல்லியல் துறையின் உதவியுடன் படியெடுத்தவர். பாண்டியர் வரலாறு நீண்டது. நெடியது. ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள், பல நூறு செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் மூலம் அவர்களின் வரலாற்றை அறிய முடிகிறது. பாண்டியர் வரலாற்றை மிக நுட்பமாக ஆராய்ந்து, இந்த அரிய நூலை எழுதியுள்ளார் முனைவர் மு. ராஜேந்திரன். இதன் மூலம் தமிழுக்கு அரிய சேவை செய்துள்ளார். அவசியம் படிக்க வேண்டிய நூல்.  

—-

 

ஆயிரங்கால் மண்டபம், கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 150ரூ.

ராணி வாரப்பத்திரிகையில் கவிஞர் கண்ணதாசன் தொடராக எழுதிய இந்த நாவல், இப்போது புத்தகமாக வெளிவந்து இருக்கிறது. சினிமா கதைக்கு ஏற்ப பல்வேறு திடீர் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக செல்லும் இந்த நாவலில் வழக்கம் போல கண்ணதாசனின் தத்துவச் சிதற்கல் ஆங்காங்கே காணப்படுவது கருத்துக்கு விருந்தாக அமைந்துள்ளது. கண்ணதாசனே குறிப்பிட்டு இருப்பதுபோல் சினிமா பாணியில் எழுதப்பட்டது இந்த நாவல். ரசிகர்களுக்கு மாமூல் விருந்து. நன்றி: தினத்தந்தி, 2/1/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *