கரிகாலர் மூவர்
கரிகாலர் மூவர், பேராசிரியர் வை.சு. சுப்பிரமணி ஆச்சாரியார், சேகர் பதிப்பகம், சென்னை, பக். 184, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-8.html
கரிகாலன் என்று சொன்னால், காவிரியும், கல்லணையும் நினைவுக்கு வருவது இயல்பு, சோழப் பெருமன்னராக விளங்கிய கரிகாலன் என்ற பெயர் கி.மு. 4ம் நூற்றாண்டு முதல் கி.மு. 12ஆம் நுற்றாண்டு வரை தோன்றிய சங்க இலக்கியங்களிலும், கி.பி, 12ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை தோன்றிய புராண நூல்களிலேயே அம்மன்னனுடைய வீரமும், மெய் கீர்த்தியும் பேசப்படுவதை பார்க்கலாம். அகம், புறம் என்ற இரு நூல்களிலும் ஒன்பது பாடல்களிலே பாராட்டப்படுகின்ற கரிகாலன் முதலாம் கரிகாலன் என்றும், பத்துப்பாட்டில் இரண்டாம் பாடலாகிய பொருநராற்றுப்படை கூறும் உருவப் பஃறேரிளையோன் சிறுவனாகிய கரிகாலன் இரண்டாம் கரிகாலன் என்றும், பத்துப்பாட்டின் ஒன்பதாவது பாடலாகிய பட்டினப்பாலை கொண்ட திருமாவளவனைக் கலிங்கத்துப்பரணி கூறுவதைக் கொண்டு மூன்றாம் கரிகாலன் என, மிக அற்புதமாய் அரை நூற்றாண்டிற்கும் முன்னமே பதிவு செய்துள்ளார். தோற்றுவாய், முதலாம் கரிகாலன், இரண்டாம் கரிகாலன், மூன்றாம் கரிகாலன், மூன்று கரிகாலனது காலம், காவிரியாறு, கரிகாலர்கள் காலத்திய இரு பெருநகரங்கள், கரிகாலன் காலத்திய புலவர்கள் பெரும்பாணாற்றுப்படை என, ஒன்பது தலைப்புகளில் வியக்க வைக்கும் ஆய்வுச் செய்தியினை பதிவு செய்துள்ள மிகமிக அற்புதமான ஆய்வுக் கருவூலம், தரமான ஆய்வு நூல்களையும், பழமையான அரிய தமிழ் புதையல்களை வெளிக் கொணர்ந்து வாசகர்களுக்கு, தமிழ்க் கொடை தந்ததற்கு பாராட்டுதல்கள். -கவிக்கோ. ஞானச்செல்வன். நன்றி: தினமலர், 29/12/2012.
—-
கவிக்கோலம், கிருஷ்ணமூர்த்தி, கவிக்கோலம் பதிப்பகம், 15, காமராசர் வீதி, புதிய லட்சுமிபுரம், கொளத்தூர், சென்னை 99, விலை 75ரூ.
இறைவன், தமிழ், விழி, எழில், கலை, மடல், கலை புகழ், வினா, கதை எனும் தலைப்புகளில் அந்தந்த தலைப்புக்கேற்ப தொடர்பு உடையவர்களை பற்றி கவி புனைந்து இருக்கிறார். சில தலைப்புகளில் உள்ள கவிதைகளை படிக்கும்போது ஐம்பெருங்காப்பியத்தில் உள்ள கவிதைகளோ என நினைக்கத் தோன்றுகிறது. நன்றி: தினத்தந்தி, 2/1/2013.