நாலாயிர திவ்யப் பிரபந்தம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-136-1.html
பன்னிரு ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் உரையுடன் வெளிவந்துள்ளது. உரை எழுதிய முனைவர் த.கோவிந்தன் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் எளிமையாக எழுதியுள்ளார். 4 ஆயிரம் பாடல்களும் 2 புத்தகங்களாக வெளிவந்துள்ளன. மொத்தம் 2, 164 பக்கங்கள். இரண்டு பக்கங்களும் சேர்த்து விலை 850ரூ. பாக்களையும், அழகிய கட்டமைப்பையும் காணும்போது விலை மலிவு என்றே கூறவேண்டும். நன்றி: தினத்தந்தி, 26/12/2012
—-
நெஞ்ச ஊஞ்சல், செ. ஞானன், காவ்யா, சென்னை 24, பக். 158, விலை 140ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-314-2.html
நூலைக் கையில் எடுத்தால் கீழே வைக்க மனமில்லாதபடி செய்துவிடுகிறார் நூலாசிரியர். இலக்கியக் கட்டுரைகள்தானே எனப்புரட்டினால், பக்கத்துக்குப் பக்கம் விறுவிறுப்பான புதிய தகவல்களைச் சந்திக்க முடிகிறது. இன்றைய இளைஞர்கள் பேசும் சில சொற்களைக் கேட்டு பலரும் முகம் சுளிப்பதுண்டு. ஆனால் அத்தகைய சொற்கள் நம் சங்க இலக்கியங்களில் நாகரிகமாக, கருத்தாழமிக்கச் சொற்களாகப் பயிலப்பட்டிருப்பதை நோக்கும்போது அடடா, நம் தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படாத செய்திகளோ, சொற்களோ இல்லைபோலும் என நினைக்கத் தோன்றுகிறது. கவிஞர் கண்ணதாசன் வாயின் சிவப்பு விழியிலே, மலர்க்கண் வெளுப்பு இதழிலே என்ற பாடலுக்கான வரிகளை சிவப்பை விழி வாங்க, மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்க என்பதிலிருந்து கடன் வாங்கியுள்ளார் என்பன போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன. போதி,கலாய்த்தல், அம்மணம், வந்தியா, சிறுக்கி, கம்னுகெட, தடுக்காதே, பக்கு, ஆனாலும் முதலிய சொற்றொடர்களுக்கான விளக்கங்கள் அருமை. மொத்தம் 48 குட்டிக் கட்டுரைகள், இல்லை குட்டிக் கதைகள் என்றே சொல்லாம். படித்து முடித்ததும் ஒவ்வொரு கட்டுரைகளும் நெஞ்ச ஊஞ்சலில் ஆடிக்கொண்டே இருக்கின்றன. நன்றி: தினமணி, 31/12/2012,