அறிவியல் தொழில்நுட்ப நூல் வரிசை தொகுதி 5
அறிவியல் தொழில்நுட்ப நூல் வரிசை தொகுதி 5, விண்வெளித் தொழில் நுட்பம் செயற்கைக்கோள்கள், நெல்லை சு. முத்து, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னைப் பல்கலைக்கழக வளாகம், சென்னை 5, பக். 358, விலை 300ரூ.
தமிழில் மிக அபூர்வமாகவே நல்ல தரமான நூல்கள் வெளியாகின்றன. தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள இந்த நூல் அப்படிப்பட்டதாகும். விண்வெளியில் உள்ள நிலைமைகள், ராக்கெட் தோன்றிய வரலாறு, ராக்கெட் வடிவமைப்பு, எரிபொருட்கள், ராக்கெட் தளம், செயற்கைகோள்கள், விண்கலன்கள் என்று தொடங்கி எதிர்கால ராக்கெட் எஞ்சின்கள் வரை அனைத்தும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. தனித்தனியாக மூன்று அல்லது நான்கு நூல்களில் சொல்லப்பட வேண்டிய விஷயங்கள் இந்த ஒரே நூலில் இடம் பெற்றுள்ளன. என்றாலும் சில குறிப்பான விஷயங்கள் விரிவாகச் சொல்லப்படவில்லை. இந்தியா பல்வேறான செயற்கைக்கோள்களை உயரே செலுத்ரதிப் பல சாதனைகளைப் படைத்தது, தொலையுணர்வு, செயற்கைகோள்கள் துறையில் இந்தியா கிட்டத்திட்ட முதலிடம் வகிப்பது, சந்திராயன் பல கோளாறுகளுக்கு உள்ளாகி இறுதியில் ஒரு பெரிய கண்டுபிடிப்பைச் செய்த விஷயம் போன்றவை இடம் பெறவில்லை. நூலாசிரியர் பல புதிய கலைச் சொற்களையும் உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளார். எளினும் புரிதல் அவசியம் என்று கருதி ஆங்காங்கு அடைப்புக் குறிக்குள் ஆங்கிலச் சொற்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஏராளமான படங்கள் உள்ளன. ராக்கெட், செயற்கைக்கோள், விண்கலன்கள் ஆகியவை பற்றி நன்கு அறிந்துகொள்ள விரும்புவோருக்கு சிறந்த நூல். இது ஒரு தகவல் களஞ்சியம். நன்றி: தினமணி, 2/9/2013
—-
தஞ்சைப் பெண் படைப்பாளிகள், காவ்யா, 16, இரண்டாம் குறுக்கு வீதி, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 24, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-352-7.html
தஞ்சைப் பெண் படைப்பாளிகளான மூவலூர் ஆ.ராமாமிர்தம்மாள், வசுமதி ராமசாமி, கு.ப.சேது அம்மாள், ஆர். சூடாமணி, கே. ஜெயலட்சுமி, ருக்குமணி பார்த்தசாரதி, சிவசங்கரி, அனராதா ரமணன், ராஜலட்சுமி ஆகியோர் படைப்புலகில் சாதனையாளர்கள், அந்த படைப்பாளிகளைப் பற்றி, முனைவர் பட்டத்திற்காக ஆராய்ந்து எழுதப்பட்ட ஆய்வே, நூலாக வெளிவந்துள்ளது. பெண் படைப்பாளிகளின் பிறப்பும், இளமையும் மண வாழ்க்கை, காலச் சூழல், கல்வியறிவு என்ற உட்தலைப்புகளாகப் பகுக்கப்பட்டு அவர்களின் வரலாறு விளக்கப்பட்டுள்ளது. மேலும் புதினங்கள் ஓர் ஆய்வு, புதினங்களில் மாறுபட்ட பாசஉறவுகள், புதினங்களில் புதினம், புதினங்களில் இலக்கிய நயம், புதினங்களில் மனிதநேயம் ஆகியவை பற்றி ஆராய்ந்து எழுதியுள்ளார் நூலாசிரியர் முனைவர் அ. பாலின் ஜெயசீலி. நன்றி : தினத்தந்தி, 28/8/2013.