வாலி சிறுகதைகள்
வாலி சிறுகதைகள், கவிஞர் வாலி, வாலி பதிப்பகம், சென்னை 17, பக். 112, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-867-0.html
இந்தப் புத்தகத்தில் நறுக்குத் தெரித்தாற்போல உள்ள இந்த ஆறு சிறுகதைகளுமே வாலியின் கற்பனைக்கும் கருத்துக்கும் கவிதா விலாசத்தையும் பறைசாற்றுகின்றன. சிறுகதைகள்தான் தன் எழுத்துக்கு பிள்ளையார் சுழி என்று முகவுரையில் சொல்லியிருக்கிறார். முதலில், சங்கீத குரு நம்பூதிரியின் பெண்ணை குரு என்பவன் மணக்கும் கலப்பின சங்கீதக் காதல், கதை முழுவதும் துக்கடாக்கள். சில இடங்களில் ராகமாலிகா, இரண்டாவது கதை, தன்னை விரட்டியடித்த கணவனிடம் விடாப்பிடியான அன்பு செலுத்திய மனைவியின் கதை. கற்பு சூறையாடப் பட்டதும் பட்டென்று உயிரை விட்ட தெய்வக் கற்பினள் அவள். மூன்றாவது மாமனாரைத் தன்னைப் பெற்ற தகப்பனாக பாவித்து அன்பைப் பொழியும் மருமகள் பாசம். நான்காவதாக கட்டிய மனைவியின் தாலி தோஷ ஜாதக ட்விஸ்ட். தூக்க மாத்திரை துக்கத்தில் போய்ச் சேர்ந்தவனின் சோகக் கதை. ஐந்தாவதாக பரதேசியாகப் போனாலும் நாய்வால் போல நிமிர்த்த முடியாத பாசக்கார சாமியார் கதை. ஆறாவதாக ராம காதையைப் போல காசில்லாதவன் மேலேதான் காதல் வரும் என்று உணர்த்தும் சுய காதல் கதை. சிறிய புத்தகம் எனினம் செறிவான கதைகள். நன்றி: தினமணி, 15/9/2013.
—-
எழுச்சியின் பிறப்பு, வெ. சிந்தனைச் செல்வன், இம்பீரியல் கிராபிக்ஸ், 77, கேட் தெரு, சென்னை 1, பக். 352, விலை 150ரூ.
மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். பிரச்னைகள் ஒருவாக ஆரம்பித்துவிட்டன. ஒரே நாட்டில் ஒன்றாக வளர்ந்தவர்கள்தான் இந்தியர்கள் பாகிஸ்தானியர்கள். ஆனால் எல்லை வகுத்தபின்னர் பகையை வளர்த்துக் கொண்டனர். இவர்கள் பகையை விட்டு இணைந்து வளர்ந்தால் எப்படி இருக்கும். இப்படிப் பட்ட கருத்துக்களை எல்லையில் போர் முனையில் போராடிக் கொண்டிருக்கும் வீரர்கள் மூலம் கற்பனை கலந்த கதை வடிவில் உணர்த்தும் நூல். இந்தியாவில் உள்ள கலாச்சாரமும் பண்பாடும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் நூல். 21ம் நூற்றாண்டில் இந்தியா சந்தித்து வரும் சவால்களை எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறலாம் என்பதை கதைவடிவில் எழுதியுள்ளார் சிந்தனைச் செல்வன். நன்றி; குமுதம், 11/9/2013.