எதற்குள்ளும் எதுவும் இல்லை
எதற்குள்ளும் எதுவும் இல்லை, மேனகா பதிப்பகம், 375/23, கங்கா காவிரி குடியிருப்பு, அண்ணாநகர் மேற்கு, சென்னை 40, விலை 50ரூ.
அற்புதமான கருத்துக்களோடு 76 தலைப்புகளில் கவிதைகளை படைத்து வெளியிட்டிருக்கிறார் கவிஞர் ம.இரவிபாரதி. இவரது கவிதைகள் இன்றைய சமூக சூழலை பாடங்களாக மனதில் பதியவைக்கின்றன. இவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருந்தாலும் சிறந்த கவிஞராகவும் திகழ்கிறார் என்பது இந்த நூலை படைத்திருக்கும் முறையில் தெரிகிறது. நன்றி: தினத்தந்தி, 11/9/2013.
—-
ஓமந்தூரார்-முதல்வர்களின் முதல்வர், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-4.html
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, தமிழ்நாட்டின் (பழைய சென்னை மாகாணம்) முதல்வராக இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி செட்டியார். காமராஜரைப்போல இருவரும் படிக்காத மேதை. ஊழலுக்கு இடம் தராத நேர்மையாளர். இவருடைய ஆட்சியின்போதுதான் தமிழகம் முழுவதும் மதுவிலக்கு அமுலுக்கு வந்தது. ஜமீன்தாரி ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு முதலான முற்போக்குச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மனதில் உள்ளதை துணிச்சலாக வெளியிடக்கூடியவரான ஓமந்தூரார், நேருவுடன் மோதக்கூட தயங்காதவர். நன்றி: தினத்தந்தி, 11/9/2013.
