வெள்ளை வாரணம்

வெள்ளை வாரணம், தி.நெல்லையப்பன், காவ்யா, சென்னை 24, பக்.168, விலை 130ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-319-1.html

சிறந்த தமிழறிஞரான க.வெள்ளை வாரணனார் இலக்கணம் சார்ந்த ஆய்வு நூல்களை மிகச் சிறப்பாக எழுதியவர். அவருடைய இலக்கணப் பணிகளை எடுத்துக்காட்டும்விதமாக உருவாகியுள்ள நூல் வெள்ளை வாரணனாரின் பல்வேறு இலக்கணம் சார்ந்த நூல்களிலிருந்து திரட்டிய செய்திகளின் அடிப்படையில் தமிழ் இலக்கண நூல்களான தொல்காப்பியம், நன்னூல் போன்றவற்றின் காலத்தை ஆராயும் கட்டுரையும், இவ்விரு இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளை ஒப்பிட்டுப் பார்த்து வெள்ளை வாரணனார் வந்தடைந்த முடிவுகளை விளக்கும் கட்டுரையும் இந்நூலில் அடங்கியுள்ளன. இலக்கணக் கோட்பாடுகளையும் அணுகுமுறைகளையும் விளக்கும் கட்டுரையும் உள்ளது. தமிழ் இலக்கண உலகில் தனக்கென்றொரு சிறப்பிடம் பெற்றிருந்த வெள்ளை வாரணனாரின் தெளிந்த இலக்கண இயல் அறிவை இன்றைய தலைமுறையினருக்குத் தரும் சிறந்த நூல். நன்றி: தினமணி, 12/3/2012.  

—-

 

மாந்த நிதானம், ச. அஜிதாசுனில், அருள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, விலை 60ரூ.

உலகில் மனிதர்கள் தோன்றி வாழத்தொடங்கிய காலத்திலிருந்து நோயும் மருத்துவமும் தொடங்கிவிட்டது. பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும், சித்த மருத்துவம் குறித்து அறிய தகவல்களை நூலாசிரியர் சேகரித்து தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். குறிப்பாக குழந்தைகளுக்கு வரும் மாந்த நோய் (மாந்தம்)அதன் வகைகள், நோய்க்கான அறிகுறிகள், குணப்படுத்துவதற்கான மருந்துகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 18/9/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *