தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்
தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், காமராஜர் தெரு, பண்ருட்டி, கடலூர் மாவட்டம், விலை 360ரூ.
பண்டைய தமிழ் நூல்களில் கொட்டிக்கிடக்கின்ற தாவரத் தொடர்புடையத் தகவல்களைத் தொகுத்து வழங்க வேண்டும் என்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட நூல். நிலத்திணைகளின் பெயராக இடம் பெற்ற தாவரங்கள் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) போர் முறை, போர் நிகழ்வு மற்றம் போர் வீரர்களுக்கு அடையாளமாக பயன்படுத்தும் தாவரங்கள் (வாகை, வெட்சி, தும்பை, கரந்தை, உழிஞை, வஞ்சி, காஞ்சி) மருந்தாக பயன்படுத்தும் வேம்பு, கடு, போன்ற தாவரங்கள், சொல்லாக்கத்திற்கு பயன்படுத்திய 26 தாவரங்கள் வழிபாடு முறைக்கு பயன்படுத்திய காந்தாள் தாவரம், வத்து, ஓவிய முறைக்கு பயன்படுத்திய தாவரங்கள், (வள்ளி, வள்ளை) மரபு பெயராக புல் என 48 தாவரங்கள் ஆகியவற்றை கண்டறிந்து, தாவர்ங்களின் ஆங்கிலப் பெயர் வகைப்பாட்டியல், தாவர விளக்கங்கள், சொல்லாக விளக்கங்கள், தாவரங்களின் வண்ணப்படம் மற்றும் தொல்காப்பிய பாடல் முழுவதுமாக தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. தாவர வகைகளின் பயன்பாட்டினைப் பற்றி அறிந்துகொள்ளக் கூடிய அரிய நூல். நன்றி: தினத்தந்தி, 18/9/2013.
—-
நல்ல லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு, கு. நாகராசன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ் லிமிடெட், சென்னை 83, பக். 192, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-493-4.html
நாட்டுக்கோழி வளர்ப்பது மிகவும் குறைந்துவிட்ட காலத்தில் நாட்டுக் கோழியை வளர்ப்பதனால் இலாபம் கிடைக்கும் என்று கூறும் நூல். இந்தியாவில் என்னென்ன கோழியினங்கள் உள்ளன? நாட்டுக்கோழி என்று எந்த வகைக் கோழிகளைக் குறிப்பிடுகிறோம்? கோழிகளுக்கு வரும் நோய்கள் எவை? அவற்றை எவ்வாறு தீர்ப்பது? கோழிகளுக்கு எப்படிப்பட்ட உணவுகள் தரவேண்டும்? என்பன போன்ற விவரங்களை மிகவும் சுவாரஸ்யமாகவும் தெளிவாகவும் கூறும் நூல். நாட்டுக்கோழி வளர்ப்புடன் கூட, கூஸ் வாத்து வளர்ப்பு, வான்கோழி வளர்ப்பு, ஜப்பானியக் காடை வளர்ப்பு, அலங்காரக் கோழி வளர்ப்ப பற்றிய கட்டுரைகளும் உள்ளன. கோழி வளர்ப்பைப் பற்றிய அறிவியல் பூர்வமான தகவல்களைச் சொல்லும் இந்நூல், கோழிகளின் மீது ஆசிரியருக்கு உள்ள ஈடுபாட்டையும் அன்பையும் வெளிப்படுத்துவது சிறப்பு. நன்றி: தினமணி, 12/3/2012.