மெய்யும் பொய்யும்
மெய்யும் பொய்யும், மேலாளர், ஸ்ரீ காசிமடம், திருப்பனந்தாள் 612504, விலை 25ரூ.
திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்தின் 21வது அதிபர் முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள், கயிலை மாமுனிவர் என்று அழைக்கப்படுகிறார். அவருடைய அருளுரைகள், கருத்துரைகள், அறிவுரைகள் கொண்ட நூல். ஆன்மிகம், ஆலயவழிபாடு, தமிழ், வடமொழி, திருக்குறள், வெளிநாடுகளில் தமிழர்கள்… இவவ்று பல்வேறு பொருள் பற்றி, பயனுள்ள கருத்துக்கள் இந்நூலில் நிறைந்துள்ளன. ஆன்மிகம் பற்றியும், இலக்கியம் பற்றியும் பலருடைய மனதில் இருக்கக்கூடிய ஐயங்களுக்கு இந்த நூலில் விடை இருக்காது. எல்லோரையும் ஈர்க்கக்கூடிய நடையில் நூல் எழுதப்பட்டுள்ளது. வாசிக்கும்போதும் சரி, வாசித்து முடித்த பிறகும் சரி. சிந்தனையை விட்டு அகலாத கருத்துக்கள் நிறைந்த புத்தகம். நன்றி; தினத்தந்தி, 4/4/2012.
—-
தலைமுதல் கால் வரை உடல்நலக் கையேடு, டாக்டர் எஸ். அமுதகுமார், ஏகம் பதிப்பகம், 3, பிள்ளையார் கோவில் தெரு, 2ம் சந்து, முதல் மாடி, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 80ரூ.
உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளின் அமைப்பு, இயங்கும்விதம், அவற்றில் ஏற்படும் கோளாறுகள், அக்கோளாறுகளை போக்கும் முறைகளை எளிமையாக தெரிவித்துள்ளார் ஆசிரியர் அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய நூல். நன்றி; தினத்தந்தி, 4/4/2012.