மாவீரன் நெப்போலியன்
மாவீரன் நெப்போலியன், கண்ணப்பன் பதிப்பகம், 16, கம்பர் தெரு, ஆலந்தூர், சென்னை 16, விலை 30ரூ.
மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் புத்தகம். சாதாரண நடுத்தர வர்க்கத்தில் பிறந்து பிரேஞ்சு நாட்டின் சக்ரவர்த்தியாக உயர்ந்தவர் மாவீரன் நெப்போலியன். பல போர்களில் வெற்றி பெற்ற நெப்போலியன், ஐரோப்பிய நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். மேலும், நெப்போலியனின் காதல் குறித்தும், அவர் பெற்ற வெற்றிகள் மற்றும் சீர்ததிருத்தங்கள் குறித்து விவரிக்கிறார் ஆசிரியர் சித்தார்த்தன். நன்றி; தினத்தந்தி, 4/4/2012.
—-
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, ம.பொ.சிவஞானம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை 17, பக். 392, விலை 175ரூ.
To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-040-0.html
செங்கோல் இதழில் 1963ஆம் ஆண்டு ம.பொ.சி. தொடராக எழுதி வெளிவந்த நூலின் மறுபதிப்பு. இந்நூலில் வள்ளலார் தோன்றிய காலத்தின் சமூகப் பின்னணி குறிப்பிடப்படுகிறது. இராம்மோகன், தயானந்தர், இராமகிருஷ்ணர் ஆகியோரைப் போலத் தமிழ்நாட்டில் அக்காலத்தில் தோன்றியவர் வள்ளலார். சாதி, சமயங்களற்ற சமுதாயத்தைக் காண்பதற்கு முன்பாக, அச்சமயங்களிடையே நிலவி வரும் வேற்றுமைகளையும், விரோதங்களையும் ஒழித்து, அவற்றிடையே சமரசம் காண்பதற்கே சமரசச் சன்மார்க்க இயக்கத்தைத் தொடங்கினார் என்று கூறும் நூல். அருட்பா, மருட்பா போராட்டங்களுக்கான காரணம், பின்னணி பற்றிய விரிவான செய்திகளும் அடங்கியுள்ளன. வள்ளலாரின் சித்தாந்தங்களை விளக்கும் நோக்கத்துடன் இந்நூல் எழுதப்பட்டிருப்பினும், அவருடைய வாழ்க்கைச் சம்பவங்களும் சேர்த்தே சொல்லப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் சிந்தனை வளர்ச்சியில் வள்ளலாரின் பங்கை எடுத்துக் கூறும் சிறந்த நூல். நன்றி: தினமணி