எலிக்குஞ்சுகளும் படி நெல்லும்
எலிக்குஞ்சுகளும் படி நெல்லும், ஸ்ரீரங்கராஜபுரம் துளசி, அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி, பக். 64, விலை 30ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-178-7.html
சுதந்திரம் வெட்டப்படுகிறது பூங்காச்செடிகள் எரிகிறது சூளை மண் மரணம். இம்மண்ணின் நாடித்துடிப்பை அரிய இந்தக் கவிதைகளே போதும். வார்த்தைகளை ஜாலமாக்கி ரசனைக்காக சில சொற்களைக் கோர்த்து கவிதையாக்கும் இந்த காலத்தில் மண்ணின் மணத்தை நுகரவைத்து, மக்களின் மனதை அறியச் செய்யும் ஹைக்கூக்களை, வாசிப்பு மனங்களில் ஆணியடித்து தொங்கவிட்டுப் போகிறார் துளசி. சில ஹைக்கூ, சில ஹைக்கூ பாணி, சில சென்ரியூ என்று சொன்னாலும் அத்தனையிலும் கவிஞர் வரைந்து போகும் மண்தோய்ந்த சித்திரங்கள் நம் மனதை விட்டு அகலாதவை. புகைப் போட்டு வலைகளறிந்தேன் அகப்பட்டன எலிக்குஞ்சுகளும் படி நெல்லும். இந்த படிமத்தின் படிநெல் அடுத்த நாற்றுக்கான விதையாய் நம் முன் காட்சிப்படுகிறது. நன்றி: குமுதம், 2/10/2013
—-
ஆதி உண்மைச் சிலப்பதிகாரம், புலவர் சிகாமணி சம்பந்தன், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை 40, பக். 208, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-178-8.html
முற்போக்கான எண்ணத்தை ஏற்படுத்தக் கூடிய ஆய்வு நூல் இது. சிலப்பதிகாரத்தில் கலப்படம் அதிகம் என்றும் அது வடமொழிக்காரர்கள் செய்த சூழ்ச்சி என்றும் அவற்றை தைரியமாக நீக்கி, இதுதான் சிலப்பதிகாரம் என்ற ஆய்வு செய்து தருகிறார். விதியின் வலிமை, பெண்ணின் கற்பு, அரச நீதி ஆகிய மூன்று கொள்கைகளை வலியுறுத்தும் படைப்பே சிலப்பதிகாரம். இதில் அரச நீதி என்ற ஒரு கருத்து மட்டும் சிலப்பதிகார மூல நூலுக்கு உரியது, மற்ற இரண்டும் வடமொழி வல்லுநர்களின் இடைச் செருகல்கள் என ஆதாரத்துடன் நிறுவுகிறார். புலவரின் ஆய்வு பாராட்டுக்குரியது. பின்னைய ஆய்வுகளுக்கு ஆதாரமானது. நன்றி: குமுதம், 2/10/2013