வேலூர் புரட்சியில் வீரமிகு முஸ்லிம்கள் (1806)

வேலூர் புரட்சியில் வீரமிகு முஸ்லிம்கள் (1806), செ. திவான், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 128, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-171-5.html

வேலூர் புரட்சி உள்ளிட்ட இந்திய விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரைத் தந்து, பல தியாகங்களைச் செய்த தமிழக முஸ்லிம்கள் பலரின் வரலாறு மறைக்கப்பட்டுவிட்டது. அவற்றையெல்லாம் தொகுத்து, விடுதலைப்போரில் முஸ்லிம்களின் பங்கு என்ன என்பதை உலகிற்கு உணர்த்தும் நூல் இது. தமிழகத்தில் இஸ்லாம் வேரூன்றியதிலிருந்து, கோல்கொண்டாவின் மீர் ஜும்லா, பீஜப்பூர் படைத் தலைவர் முஸ்தபா கான், நவாப் துல்பிகார்கான், மாவீரன் மீர்காசிம், தென்னாட்டு வீரத்திலகம் ஹைதர் அலி, மாவீரன் கான்சாகிப் (மருதநாயகம்), தீரன் திப்பு சுல்தான், அவர்களது பிள்ளைகள் போன்றவர்களின் வீரதுரம் பேசப்பட்டு, இந்து வீரர்களுடன், முஸ்லிம் வீரர்கள் இணைந்து நடத்திய வேலூர் புரட்சியையும் விளக்குகிறார் ஆசிரியர். வேலூர் புரட்சிக்கு முக்கியக் காரணம் முஸ்லிம்களின் நடவடிக்கையும்தான் என்பதை நிரூவுகிறார். இந்தப் புரட்சியில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிர்களைத் துறந்த முஸ்லிம்களைப் பற்றிய முக்கியப் பதிவு இது. நன்றி: குமுதம், 9/10/2013.  

—-

 

என்மகஜெ, தமிழில்- சிற்பி பாலசுப்பிரமணியம், கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தியாகராயர் நகர், சென்னை 17, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-172-0.html

கேரள மாநிலத்தின் வடகோடியில் இருக்கும் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சி தான் என்மகஜெ. எட்டுப் பண்பாடுகள் அல்லது எட்டு மொழிகள் வழங்கும் இடம் என்று பொருளாகும். இயற்கையின் செல்லமாக இருந்த இப்பகுதியில், முந்திரி மரவிளைச்சலை அதிகரிப்பதற்காக அரசு பூச்சிக்கொல்லி மருந்து தெளித்ததன் விளைவாக ஏற்பட்ட பேரவலம் இந்த நாவலில் நெஞ்சம் நெகிழ எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் பேராசிரியர் அம்பிகா சுதன் மாங்காடு எழுதிய இந்த நாவலை தமிழில் சிற்பி பாலசுப்பிரமணியம் மொழி பெயர்த்துள்ளார்.  

—-

 

தேவதாசி ஒழிப்பு போராட்டக் களங்கள், அ.புவியரசு, காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 24, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-171-9.html

சேரன்மகாதேசி குருகுலப் போராட்டம், வைக்கம் போராட்டம், தேவதாசி ஒழிப்பு இயக்கம் ஆகியவற்றின் வரலாற்று குறிப்புகள் தேவதாசி ஒழிப்பு போராட்டக் களங்கள் என்ற தலைப்பில் நூலாக தொகுக்கப்பட்டுள்ளன. அனைத்து தரப்பினரும் படித்து வரலாற்றை தெரிந்து கொள்ள உதவும் நூலாகும். நன்றி: தினத்தந்தி, 2/10/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *