உயிர்ச்சொல்

உயிர்ச்சொல், கபிலன் வைரமுத்து, கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 200, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-207-2.html

நீண்ட நாட்களாக குழந்தையில்லாமல் ஏங்கித் தவித்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தவுடன் ஏற்படும் மனஉளைச்சல்களையும் அதிலிருந்து அவள் மீண்டதையும் உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் நாவல். அவளுடைய கணவன் ஊடகத்துறையில் செல்படக்கூடியவன். அவனுடைய நண்பன் நாட்டின் ஊழல் அரசியலை முடிவுக்குக் கொண்டுவர முயல்கிறார்கள். இணைய தளங்கள் மூலமாகவும், கண்காட்சிகள் மூலமாகவும் மக்கள் விழிப்புணர்வு பெற வைக்கப்பாடுபடுகிறார்கள். மக்கள் எழுச்சியின் மூலம் ஊழலற்ற ஆட்சியை அமைக்க முடிகிறது. அதிலும் சில குறைபாடுகள் தோன்றுகின்றன. கற்பனையேயானாலும் நாவலாசிரியரின் சமூக அக்கறையைப் புரிந்துகொள்ள முடிகிறது. குடும்பம், சமூகம் ஆகிய இரண்டு தளங்களில் நாவல் பயணம் செய்கிறது. குடும்பத்தில் கணவன், மனைவி உறவு, அவர்களுக்கிடையிலான அன்புமிக்க நெருக்கம், ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்வது மிகவும் இயல்பாகவும், அழகாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. நாவலின் மொழிநடையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். உரைநடையா? கவிதையா? என்று பல சமயங்களில் வாசகர்களைத் திகைக்க வைக்கும் மொழிநடை. அதேசமயம் நாவலுக்குள் வாசகர் அமிழ்ந்து போவதற்கு தடையில்லாமல் அந்தக் கவிதை மொழி அமைந்திருப்பது சிறப்பு. நன்றி: தினமணி, 23/1/2012.  

—-

 

பனிமலையில் ஓர் பக்திப் பயணம், சரோஜா கிருஷ்ணமூர்த்தி, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 75ரூ.

முக்திநாத் புனிதப்பயணத்தை பனி மலையில் ஓர் பக்திப் பயணம் என்ற தலைப்பில் நூலாசிரியர் படங்களுடன் தொகுத்துள்ளார். அமர்நாத் குகை பற்றி தெரிவிக்கும்போது நம்மையும் உடன் அழைத்துச் சென்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளார். அத்துடன் மாதா வைஷ்ணவிதேவியின் வரலாறு, கோல்கந்தோலி, தேவமாய், சரண்பாதுகா, ஹாதிமாதா, சான்ஜிசாட், பைரன்நாத் கோவில் கதைகளை தொகுத்து வழங்கியது சிறப்பாகும். குருசேத்திரம் குறித்த செய்திகள், மகாபாரத்போர் மட்டுமின்றி, அதன் கதை மாந்தர்களையும் நம் கண்முன் கொண்டு வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. நன்றி: தினத்தந்தி, 25/9/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *