உணர்வு பொருளாதல்

உணர்வு பொருளாதல், ஜே.பி.எம். பப்ளிகேஷன்ஸ், 2, எக்ஸ்சர்வீஸ்மென் என்க்ளேவ், அகரம் ரோடு, சேலையூர், சென்னை 73, விலை 230ரூ.

ஆன்மிக தகவல்கள் மற்றும் உலகநடப்புகளை 16 தலைப்புகளில் கொண்ட புத்தகம். நூலாசிரியர் ஜே. பன்னீர்செல்வம் தெளிந்த நீரோடை போன்ற நடையில் அரிய தகவல்களை எழுதியிருக்கிறார். சமூகம் அறிய வேண்டிய ஆன்மீகத்தின் முகத்தை அறிவியல் சாயலில் இந்தப் புத்தகம் காட்டுகிறது. பண்டைக்கால இந்திய தத்துவங்களும், அண்மைக்கால இளம் அறிவியல் கோட்பாடுகளுடன் ஒத்துப் போகிறது என்பதை நூலாசிரியர் தெளிவுப்படுத்தி உள்ளார். 317 பக்கங்களை கொண்ட இந்த புத்தகம் அரிய பொக்கிஷம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஆன்மிகம், மூச்சுப்பயிற்சி, தியானம், பூஜைகளும் சடங்குகளும் குறித்த அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. நன்றி; தினத்தந்தி, 5/12/12.  

—-

 

டீன் ஏஜ் பிரச்னைகளும் தீர்வுகளும், டாக்டர் பொ. முருகன், குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 192, விலை 120ரூ.

உடலளவிலும் உள்ளத்தளவிலும் பல மாற்றங்கள் நிகழ்வதால் டீன் ஏஜ் வயதினர் ஒவ்வொருவரும் மிகுந்த குழப்பத்திற்கு உள்ளாகின்றனர். அதனால் டீன் ஏஜ் வயதினர் தங்களைத் தாங்களே புரிந்து கொள்ளவும், அவர்களது பெற்றோர் அவர்களைப் புரிந்து கொள்ளவும் ஒரு வழிகாட்டி அவசியம். அந்த வழிகாட்டிதான் இந்நூல் என்கிறார் டாக்டர்முருகன். டீன் ஏஜ் வயதில் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள், அவர்களக்க ஏற்படும் மனஅழுத்தங்கள், அதற்கான தீர்வுகள், அவர்களுக்கான உணவுப் பழக்கங்கள், டீன் ஏஜ் சைக்காலஜி, நட்பு, காதல், மோகம், உடலுறவு, அவர்களின் உணர்ச்சிகள், சுற்றியுள்ள உறவினர்கள் பங்கு, எதிர்காலம் என்று எல்லாவற்றிற்கும் வழிகாட்டியாக இந்நூல் விளங்குகிறது. டீன் ஏஜ் வயதினரும் அவர்களின் பெற்றோரும் அவசியம் படிக்க வேண்டிய நூல். குமுதம் ஹெல்த் பத்திரிகையில் டாக்டர் முருகன் தொடராக எழுதி மிகுந்த வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நன்றி: குமுதம், 5/12/12.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *