பாம்பின் கண் (தமிழ்சினிமா ஓர் அறிமுகம்)

பாம்பின் கண், (தமிழ்சினிமா ஓர் அறிமுகம்), கிழக்குப் பதிப்பகம், 177/130, அம்மன் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-701-5.html

திரைப்படத்துறை பற்றி ஆராய்ச்சிகள் செய்து புகழ் பெற்ற க. தியோடர் பாஸ்கரன், தமிழ் சினிமா வரலாற பற்றிய இந்த நூலை எழுதியுள்ளார். இந்நூல் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, பிறகு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கில நூல் ஜனாதிபதி பரிசைப் பெற்றது. தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் (1931) முதல் இப்போதைய படங்கள்வரை, படிப்படியாக ஏற்பட்ட மாறுதல்களை தொடக்கத்தில் எடுத்தக்கூறும் ஆசிரியர், பின்பகுதியில் முக்கிய படங்கள் பற்றி விரிவான விமர்சனம் எழுதியுள்ளார். சினிமா மீது ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.  

—-

 

தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி? வள்ளிமயில் பதிப்பகம், 32/1. கங்கை அம்மன் கோவில் தெரு, வடபழனி, சென்னை 26, விலை 65ரூ.

மாணவர்கள், இளைஞர் சமுதாயத்துக்கு பயனுள்ள நூலை ஆசிரியர் அ. ரத்தினசாமி தந்துள்ளார். பள்ளி ஆசிரியராக பணியாற்றிய அனுபவத்தின் மூலம் சொல்ல வந்த கருத்தை யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். நன்றி: தினத்தந்தி, 5/12/12.  

—-

 

நல்லறம் வளர்த்த வள்ளல் பச்சையப்பர், முனைவர் எஸ். பரதன், திருமதி மருதேவி பரதன் அறக்கட்டளை, 2980, இசட் பிளாக், அண்ணாநகர், சென்னை 40, பக். 174, விலை 150ரூ.

பச்சையப்பரின் வாழ்க்கை, அவர் வாழ்ந்த ஊர்கள், கோயில், அறப்பணிகள், துபாஷியாக அவர் பணியாற்றியது, அவர் உருவாக்கிய கல்வி நிறுவனங்கள், அவu கட்டிய கோயில்கள், எழுப்பிய கோபுரங்கள், அறக்கட்டளைகள் தமிழகம் எங்கும் விரவிக்கிடக்கின்றன. தம் வாழ்வில் திரட்டிய முழு சொத்தையும் அறப்பணிக்காகவே வழங்கி தமிழகக் கொடைஞர் வரலாற்றில் முதலிடம் பிடித்தவர் வள்ளல் பச்சையப்பர். இதுபோன்று பச்சையப்பரின் முழு வாழ்க்கையையும் ஆய்வு நோக்கில் எஸ். பரதன் எழுதியிருப்பது, பச்சையப்பருக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 5/12/12.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *