பயங்கரவாதம் நேற்று இன்று நாளை

பயங்கரவாதம் நேற்று, இன்று , நாளை, பி. ராமன், தமிழில்-ஜே.கே. இராஜசேகரன், கிழக்குப் பதிப்பகம், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17, பக். 424, விலை 290ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-704-6.html

எது பயங்கரவாதம்? யார் பயங்கரவாதிகள்? அவர்களை வழிநடத்தும் சித்தாந்தம் எது?பயங்கரவாதத்தை எப்படி முறியடிப்பது? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வதுடன், பயங்கரவாதத்தின் வேர்களையும் கிளைகளையும் இந்நூல் தேடிச்செல்கிறது. இந்தியாவின் தலையாயப் பிரச்னையான மாவோயிஸ்டுகள் தொடங்கி உலகளவில் அச்சுறுத்தல் ஏற்படுத்திவரும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் வரை அனைத்தையும் நுணுக்கமாக ஆராய்கிறது இந்நூல். 2008ல் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலின் தமிழாக்கம் இது. நன்றி: குமுதம், 5/12/12.  

—-

 

புத்தர் காட்டும் வாழ்க்கைச் சக்கரம், மெத்தா பதிப்பகம், 1848-8, ஆறாவது அவென்யூ, அண்ணாநகர் மேற்கு, சென்னை 40, விலை 175ரூ.

அகிம்சை, சமாதானம், அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, நல்லெண்ணம், உண்மை, அறிவு, எல்லா உயிர்களையும் மதித்துப் போற்றுதல், தன்னலம் துறத்தல், பகைமை, பலாத்காரம் ஆகியவற்றைக் கைவிடுதல் இவையே பகவான் புத்தரது போதனைகளின் சாரம். அப்போதனைகளின் சாரத்தை சாதாரண மக்களும் படித்து அறிந்து கொள்ளும் வகையில் இந்த நூல் எளிமையாகவும், தெளிவாகவும் இனிமையாகவும் இயற்றப்பட்டுள்ளது. மெய்ம்மையைத் தேடும் ஒவ்வொருவரும், இல்லறவாசிகளான ஆண்கள், பெண்கள், மாணவமாணவிகள் கட்டாயம் படிக்க வேண்டிய அரிய நூல் இது. தன்னலம் மட்டும் கருதும் உணர்வை விலக்கி, சார்ந்துள்ள எல்லோரின் நலனையும் பேணும் வாழ்க்கையே மகிழ்ச்சியான இல்லறம் என்று விளக்கப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பு. இல்லறத்தாருக்கென புத்தர் போதித்தருளியவற்றைத் தொகுத்து விளக்கியுள்ளார் பவுத்த அறிஞர் ஓ.ரா. ந. கிருஷ்ணன். நன்றி; தினத்தந்தி, 5/12/12.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *