இந்திய இன்சூரன்ஸ் கோடீஸ்வரர்கள்
இந்திய இன்சூரன்ஸ் கோடீஸ்வரர்கள், கனினிகா மிஸ்ரா, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 150ரூ.
இன்சூரன்ஸ் துறையில் நுழைந்து கோடீஸ்வரர்களான 9 இந்தியர்கள், அவர்களுடைய தொழில் மீது கொண்ட ஆர்வத்தால், அடிமட்டத்திலிருந்து தொடங்கி வியாபாரத்தை மிகக்குறுகிய காலத்தில் வெற்றிகரமாக மாற்றினார்கள். அவர்களின் அனுபவம் நூலாக எழுதப்பட்டுள்ளது. நேர்மை, கடின உழைப்பு, தொலைநோக்குப் பார்வை ஆகிய மூனறும் வெற்றிக்கான மந்திரமாகும். அத்துடன் குரு மந்திரமும் தொழில் வெற்றிக்கு முக்கியமானதாகும் என்பதை நூலாசிரியர் வலியுறுத்துகிறார். இன்சூரன்ஸ் துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கு பயனுள்ள நூலாகும்.
—-
கட்டுரைக் களஞ்சியம், மு. இளங்கோவன், வயல்வெளிப்பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை (அஞ்சல்), கங்கை கொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம் 612901, விலை 150ரூ.
கிரந்தப் புயலில் சிக்கிய தமிழ், வள்ளிமலை சமணர்குகை போன்று 24 தலைப்புகளில் இணையதளத்தில் வெளியான கட்டுரைகள் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. தமிழ்க்கல்வியின் நிலை மேம்பட வேண்டும், தமிழர்கள் உயர்நிலை பெற வேண்டும் என்பதற்காக கல்வி சார்ந்த கட்டுரைகள் இதில் இடம் பெற்றிருப்பது சிறப்பாகும். தமிழ் எழுத்ததுச் சீர்த்திருத்தம் குறித்தும் நூலாசிரியர் கூறி உள்ள கருத்துக்கள் சிந்தனையை தூண்டுவதாக உள்ளது. ஆய்வு மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் படித்து மொழி அறிவை வளர்க்க பயன்பெரும் நூலாகும்.
—-
விருட்ச சாஸ்திரம், ஜோதிடர் வே. இந்துமதி, லியோ புக் பப்ளிஷர்ஸ், 36, முதல் மெயின் ரோடு, சி.ஐ.டி. நகர், நந்தனம், சென்னை 35, விலை 60ரூ.
27 நட்சத்திரங்களுக்குரிய மரங்களை பற்றியும் அதன் குணங்கள், பயன்கள், பரிகாரங்கள், பயன்படுத்தும் முறைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன. நன்றி: தினதந்தி, 25/9/2013