மணிமேகலை காட்டும் மனித வாழ்வு

மணிமேகலை காட்டும் மனித வாழ்வு, சாமி சிதம்பரனார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 192, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-207-4.html ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான சீத்தலைச் சாத்தனார் எழுதிய மணிமேகலை நூலுக்கு விரிவுரை-பதவுரை-உரைச்சுருக்கம்-பொழிப்புரை என்று பல நூல்கள் வெளிவந்திருந்தாலும், சாமி சிதம்பரனாரால் இந்நூல் சற்றே வித்தியாசமானதாக எழுதப்பட்டிருக்கிறது. மணிமேகலையின் மாண்பு என்ற தலைப்பில் துவங்கி, சிந்திக்க வேண்டியவை என 23 தலைப்போடு நூல் நிறைவடைகிறது. பசிக்கொடுமை (பக்.54), பிற மத வெறுப்பு (பக். 87), ஊழ்வினையும் பிறப்பும் […]

Read more

ஜே.பி. சந்திரபாபு வாழ்க்கை வரலாறு

ஜே.பி. சந்திரபாபு வாழ்க்கை வரலாறு, விக்டோரியா பதிப்பகம், 5, நவுரோஜி அப்பார்ட்மெண்ட், 60, பச்சையப்பன் கல்லூரி விடுதி சாலை, சென்னை 31, விலை 300ரூ. நகைச்சுவை நடிகர்களில் சிறப்பிடம் பெற்றவர் சந்திரபாபு. மேல் நாட்டு பாணியில் நடனம் ஆடுவார். சொந்தக்குரலில் பாடுவார். சிவாஜிகணேசனுக்கு அடுத்த சிறந்த நடிகர் நான்தான் என்று தைரியமாகக் கூறியவர். குறைந்த படங்களில்தான் நடித்திருந்தாலும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். 1958ல் ஷீலா என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை மணந்த சந்திரபாபு, அவள் மனதில் ஏற்கனவே வேறு ஒருவர் இடம் […]

Read more

கட்டுரைக் களஞ்சியம்

கட்டுரைக் களஞ்சியம், முனைவர் மு. இளங்கோவன், வயலவெளிப் பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை (அஞ்சல்), அரியலூர் 612 901, பக். 160, விலை 150ரூ. செம்மொழித் தமிழ் ஆய்வு இளைஞர் விருது பெற்றவர் நூலாசிரியர். 24 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கிரந்த எழுத்துக்கள் பற்றிய முதல் கட்டுரையும், இறுதிக் கட்டுரையும் அறிஞர்கள் சிந்தனைக்குரியவை. கிரந்த எழுத்துக்களை நீக்கித் தமிழில் எழுத முடியும் என்பதே உண்மை. தமிழில், எழுத்துச் சீர்திருத்தம் இனியும் வேண்டுவதில்லை. 1978ல் தமிழக அரசு செய்த மாற்றம் போதுமானது. நடைமுறையிலும் பழகிவிட்டது. இனியும் சீர்திருத்தம் […]

Read more

இந்திய இன்சூரன்ஸ் கோடீஸ்வரர்கள்

இந்திய இன்சூரன்ஸ் கோடீஸ்வரர்கள், கனினிகா மிஸ்ரா, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 150ரூ. இன்சூரன்ஸ் துறையில் நுழைந்து கோடீஸ்வரர்களான 9 இந்தியர்கள், அவர்களுடைய தொழில் மீது கொண்ட ஆர்வத்தால், அடிமட்டத்திலிருந்து தொடங்கி வியாபாரத்தை மிகக்குறுகிய காலத்தில் வெற்றிகரமாக மாற்றினார்கள். அவர்களின் அனுபவம் நூலாக எழுதப்பட்டுள்ளது. நேர்மை, கடின உழைப்பு, தொலைநோக்குப் பார்வை ஆகிய மூனறும் வெற்றிக்கான மந்திரமாகும். அத்துடன் குரு மந்திரமும் தொழில் வெற்றிக்கு முக்கியமானதாகும் என்பதை நூலாசிரியர் வலியுறுத்துகிறார். இன்சூரன்ஸ் துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கு […]

Read more