கடவுளின் நிறம் வெண்மை
கடவுளின் நிறம் வெண்மை, 52 புனிதர்களின் சரிதம், எஸ்.கே.முருகன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 336, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-391-3.html
நமது இதிகாசங்கள், புராணங்கள், உபநிடதங்களில் எண்ணற்ற புனிதர்கள் உலவுகின்றனர். அவர்களில் துருவன்,பிரகலாதன், நாரதர் போன்ற பக்த மகாரத்தினங்களை அனைவரும் அறிவர். அதே சமயம் புராணங்களில் எதிர்மறை நாயகர்களாக இருந்த பலரும்கூட, இறை பக்தியில் சளைத்தவர்களல்ல. அவர்களில் சிலரை அறிமுகப்படுத்தும் முயற்சியே இந்நூல் எனலாம். மது கைடபர், சூரபதுமன், மாருசன், சகுனி, கஜமுகன் போன்ற அசுரர்களும்கூட அடிப்படையில் கடவுளின் அவதாரங்களை நிறைவேற்ற உதவிய பக்தர்களாகவே திகழ்கின்றனர். அதேபோல, தொன்மங்களில் இடம்பெற்றும் பலரால் வெகுவாக அறியப்படாத, முசுகுந்தன், ஜரன், குபேரன், கௌசல்யா, சுகிர்தன், சிகண்டி போன்றவர்களின் கதைகளிலும் அவர்களின் பக்தி மேன்மை வெளிப்படுகிறது. இத்தகைய 52 புனிதர்களைப் பற்றி சுவையான நடையில் எழுதி இருக்கிறார் நூலாசிரியர். இறைவனின் படைப்பில் அனைவரும் சமமே. அவர்கள் தங்கள் மனவேற்றுமைகளால் நல்லவர்களாகவும் தீயவர்களாகவும் மாறுகிறார்கள். அதுவும்கூட அவர்களுக்கு விதிக்கப்பட்ட நியதிப்படியே நிகழ்கிறது. இந்த எண்ணம்தான் இந்நூலைப் படிக்கும்போது தோன்றுகிறது. வித்தியாசமான பார்வையில் இதுவரை தொடப்படாத புராண மாந்தர்களை சுவாரசியமாக அறிமுகப்படுத்துகிறது இந்நூல். ஒவ்வொரு அத்தியாயத்திலும் உள்ள கோட்டோவியங்கள் நூலுக்கு சிறப்பு சேர்க்கின்றன. நன்றி: தினமணி, 30/9/13.
—-
ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் அருளிய ஸ்ரீ ஆண்டாள் காவியம் ஓர் எளிய அறிமுகம், சக்தி கே. கிருஷ்ணமூர்த்தி, பத்ம சக்தி, பக். 190, விலை 100ரூ.
விஜயநகரப் பேரரசர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், மாமன்னர் என்பதோடு மகத்தான இலக்கிய ஆர்வலராகவும் திகழ்ந்தவர். ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு விஜயம் செய்த ராயரின் மனத்தில் ஆண்டாள் நாச்சியாரின் திவ்ய சரிதம் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. அதை அவர் ஆழுக்த மால்யத என்னும் தெலுங்குப் பேரிலக்கியமாக படித்தார். சூடிக் கொடுத்த அச்சுடர்க்கொடியின் சரிதம் பற்றி, ராயர் பாடிய தெலுங்குப் பாக்களை அப்படியே தமிழில் தந்து, சிறந்த காவிய மேற்கோளுடன் தெளிவுரையும் நல்கியிருக்கிறார் நூலாசிரியர். மகிழத்தக்க மகத்தான படைப்பு. -கவும நீலாம்பரன். நன்றி: தினமலர் 17/11/13.
கடவுளின் நிறம் வெண்மை, 52 புனிதர்களின் சரிதம், எஸ்.கே.முருகன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 336, விலை 200ரூ. To buy this Tamil book online –