முதலாளி ஆனவர்களின் வெற்றிக்கதை
முதலாளி ஆனவர்களின் வெற்றிக்கதை, பெரிகாம், 37, அசீஸ் மூல்க் இரண்டாம் தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை 6, விலை 80ரூ.
தொழில் அதிபர்களாக உயர்ந்தவர்களின் வாழக்கை வரலாற்றைப் படித்துப் பார்த்தால் அந்த வெற்றிக்குப் பின்னால் கடும் உழைப்பு இருப்பது தெரியும். குறைந்த முதலீட்டில் முதலாளி ஆன 23 தொழில் முனைவோரின் வெற்றிக் கதைகள் தொழிலாளி டு முதலாளி என்ற இந்த நூலில் அடங்கியுள்ளன. இந்த வெற்றிக் கதைகளை இளங்குமார் சிங்காரம் விறுவிறுப்புடன் எழுதியுள்ளார். முதலாளியாக உயர விரும்புவோர் படிக்க வேண்டிய புத்தகம்.
—-
திருக்குறள் கதைகள், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், 132/107, சிங்கண்ண தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 2, விலை 40ரூ.
இலக்கியத்தில் கரைகண்டவர் திருமுருக கிருபானந்த வாரியார். சில திருக்குறள் பாக்களைத் தேர்வு செய்து ஒவ்வொரு குறளின் கருத்தையும் விளக்கும் விதத்தில் கதைகள் எழுதியுள்ளார். சிறிய நூல். ஆனால் அரிய நூல்.
—-
கிராமத்து ராட்டினம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 85ரூ.
பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் கதை எழுதும் ஆற்றல் இருக்கும் என்று சொல்ல முடியாது. சிலருக்கே அந்த திறமை இருக்கும். அவர்களில் ஜி. மீனாட்சியும் ஒருவர். பத்திரிகையாளரான அவர் எழுதியுள்ள சிறுகதைகள் நெஞ்சைத் தொடுகின்றன. குறிப்பாக பெண்களின் பிரச்சினைகளையும், அவர்களின் மனஓட்டத்தையும் சித்தரிப்பதில் முழு வெற்றி பெற்றுள்ளார். எல்லோருக்கும் பிடிக்கக்கூடிய எளிய இனிய நடை இவருக்கு இயல்பாகவே அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 7/8/13.