சீனா அண்ணன் தேசம்
சீனா அண்ணன் தேசம், சுபஸ்ரீ மோகன், விகடன் பிரசுரம், பக். 136, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-926-8.html
அதிக மக்கள் தொகையும், மிகப் பெரிய நிலப்பரப்பும் கொண்ட சீனாவை நாம் அனைவரும் ஒரு கம்யூனிச நாடு (செஞ்சீனா) என்ற அளவில் மட்டும் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், இந்தச் சிறிய புத்தகத்தைப் படித்து முடித்த பின், நமக்கு சீனாவைப் பற்றிய பல அரிய சுவாரஸ்யமான தகவல்கள் தெரிய வருகின்றன. குறிப்பாக கூட்டுக் குடும்ப வாழ்க்கை மற்றும் முதியவர்களைப் போற்றி மகிழும், குடும்பத்து இளந் தலைமுறையினர் பற்றிய விஷயத்தையும் பற்றிச் சொல்ல வேண்டும். பெற்றோர் சம்மதமில்லாமல் அங்கு ஒருவரும், காதல் வயப்பட்டிருந்தாலும்கூட, திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற தகவல் வியபூட்டுகிறது. ஆனால், அவர்களிடையே நிலவிவரும் மூடநம்பிக்கை (சென்டிமென்ட்) குறித்த தகவல் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. சீனா குறித்து, பல அரிய தகவல்களுடன் கூடிய இந்தப் புத்தகம், நம்மை மிகவும் யோசிக்க வைக்கிறது. நூலாசிரியை பாராட்டுக்குரியவர். -ஜனகன்.
—-
27 நட்சத்திரங்களுக்கு உரிய பைரவர் தலங்களும் பைரவர் வழிபாட்டின் பலன்களும், எஸ்.எல்.எஸ். பழனியப்பன், எஸ்.எல்.எஸ் பதிப்பகம், பக். 134, விலை 80ரூ.
சிவனின் வீரவடிவமே, பைரவர் கோலம், அந்தப் பைரவரின் வடிவங்களில், ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் ஒவ்வொரு வடிவத்தை தரிசித்து வணங்குவது, அதிக பலன் தரும் என்பது ஐதீகம். அஸ்வினி முதல் ரேவதி வரையிலான, 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு உரிய பைரவர் வடிவங்களும், அவர் உறையும் தலமும் நூலில் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. அழகிய வண்ணப்படங்கள், நூலுக்குச் சிறப்பு சேர்க்கின்றன -சிவா. நன்றி: தினமலர், 18/12/13.
