குற்றாலக் குறிஞ்சி
குற்றாலக் குறிஞ்சி, பூம்புகார் பதிப்பகம், 127/63 பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 108, விலை 275ரூ.
சாகித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம். அபூர்வமாகக் காணப்படும் குறிஞ்சியைப்போல, இந்நாவலும் தமிழுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம் என்றே சொல்லலாம். குறிஞ்சி என்ற ராகத்தின் பெயரையே தன் பெயராகக் கொண்டு, தாழ்ந்த குலத்தில் பிறந்துவிட்ட பெண். அவளின் சீலம், ஞானம், தமிழ்ப் பாட்டையே பாடுவேன் என்கிற வீரம், மக்களுக்காக மக்கள் மத்தியில் மட்டுமே பாடுவேன். சமஸ்தானங்களை, ஜமீன்களை, கலெக்டர்களை, வெள்ளைக்காரத் துரைகளை மதியேன். அவர்களுக்காகப் பாடேன் என்ற தியாகம் இவையே குறிஞ்சியின் ஆரோகணம், அவரோகணம், ஆலாபனை எல்லாம். இதில் வரும் ஞானசுந்தரம், ராஜகாந்தி, முத்துசாமி தீட்சிதர், ஆனைய்யா, நெல்சன் துரை, அபிராமபட்டர், தியாகய்யர், கோபாலகிருஷ்ண பாரதியார், சரபோஜி மன்னர் எல்லாம் பிசிரில்லாத பக்க வாத்திய பாத்திரங்கள். நாவலின் ஒவ்வொர் அத்தியாயமும் ஓர் ராகத்தின் பெயரால் அமைந்திருக்கிறது. தாள லயம் பிறழாத சுருதி பிசகாத சுத்தமான சங்கீத நாவலாக படைத்து முத்திரை பதித்திருக்கிறார், இலக்கிய சாம்ராட் கோவி. மணிசேகரன்.
—-
நறுமணப் பொருட்களின் மருத்துவப் பயன்கள், டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக் குளம் மேற்கு வீதி, மைலாப்பூர், சென்னை 4, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-440-0.html
உணவே மருந்து என்ற உண்மையை உரைக்கும் நூல். நம் நாட்டில் கிடைக்கும் மூலிகைகளின் தன்மைகளையும், பயன்களையும் அலசி ஆராய்ந்த உடல் ஆரோக்கியத்திற்கு வழிகாட்டுகிறது இந்நூல். நன்றி: தினத்தந்தி, 4/12/13.