குற்றாலக் குறிஞ்சி

குற்றாலக் குறிஞ்சி, பூம்புகார் பதிப்பகம், 127/63 பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 108, விலை 275ரூ. சாகித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம். அபூர்வமாகக் காணப்படும் குறிஞ்சியைப்போல, இந்நாவலும் தமிழுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம் என்றே சொல்லலாம். குறிஞ்சி என்ற ராகத்தின் பெயரையே தன் பெயராகக் கொண்டு, தாழ்ந்த குலத்தில் பிறந்துவிட்ட பெண். அவளின் சீலம், ஞானம், தமிழ்ப் பாட்டையே பாடுவேன் என்கிற வீரம், மக்களுக்காக மக்கள் மத்தியில் மட்டுமே பாடுவேன். சமஸ்தானங்களை, ஜமீன்களை, கலெக்டர்களை, வெள்ளைக்காரத் துரைகளை மதியேன். […]

Read more

வளம் தரும் வான்மீகியின் பாலகாண்டம், உரையும் ஆக்கமும்

வளம் தரும் வான்மீகியின் பாலகாண்டம், உரையும் ஆக்கமும், புலவர் ஆ. காளத்தி, கிள்ளை நிலையம், 16/383, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை 600024, பக். 294, விலை 190ரூ. வான்மீகி இயற்றியுள்ள ராமாயணத்தின் பாலகாண்ட தமிழ் மொழிபெயர்ப்பான இந்த நூல் எளிமையான தமிழில் எல்லோருக்கும் புரியும்படியாக வெளிவந்துள்ளது. பால காண்டத்தில் உள்ள எழுபத்து ஏழு சருக்கங்களில் சில சுலோகங்களை அழகிய முறையில் காளத்தி மொழி பெயர்த்துள்ளார். மூல நூலுக்கு ஊறு செய்யாது மொழி பெயர்த்திருப்பது பாராட்டுக்குரியது. இதைப் பாராட்டும் ஸ்ரீ வரத யதிராஜ ஜீயர் […]

Read more