முதல் உதவி தெரிந்துகொள்ளுங்கள்
முதல் உதவி தெரிந்துகொள்ளுங்கள், திருமதி. ஜாய்ஸ்ரேகா, நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 60ரூ.
விபத்து, தீக்காயம், மூச்சுத்திணறல் போன்ற சம்பவங்கள் நிகழும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதல் உதவி செய்வத அவசியம். இது குறித்த செயல்பாடுகள் பற்றி இந்த நூலில் விளக்கப்படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய நூல்.
—-
வரலாறாய் வாழ்ந்தவர்கள், வெற்றித்தமிழன், நீர் வெளியீடு, 10, 6லது தெரு, கே.கே. நகர், சென்னை 78, விலை 175ரூ.
பேரறிஞர் அண்ணா, அரவிந்தர், கணிதமேதை ராமானுஜம், நடிகர் சிவாஜி கணேசன், கிருபானந்தவாரியார், வ.உ.சி. பகத்சிங், புத்தர், முத்துராமலிங்கத்தேவர், வள்ளலார், விவேகானந்தர், ப. ஜீவானந்தம் உள்ளிட்ட 57 தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சாதனைகள், தேதி விவரங்களுடன் ரத்தினசுருக்கமாக வெளியிடப்பட்டுள்ளது.
—-
தாய்தான் என் முதல் தெய்வம், விவின் பாரதி, மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 90ரூ.
370 சிறுகதைகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 2/1/2014.