பாவேந்தம்
பாவேந்தம், பதிப்பாசிரியர்கள்-முனைவர்கள் இரா. இளங்குமரன், இரா. இளவரசு, கு. திருமாறன், பி. தமிழகன், கிடைக்குமிடம்-தமிழ் மண் பதிப்பகம், 2, சங்கார வேலர் தெரு, தி.நகர், சென்னை 17.
பாரதிதாசன் படைப்புகள் முழுவதும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய கவிதைகள், காவியங்கள், கட்டுரைகள் அனைத்தும் 25 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. பாரதிதாசன், தொடக்க காலத்தில் ஆத்திகராக இருந்தவர். அப்போது எழுதிய பக்திப் பாடல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. 25 தொகுதிகளையும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படுகிறது. பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து இவ்வளவு தொகுதிகளை வெளியிடுவது சாதாரண செயல் அல்லவே. சிறந்த கட்டமைப்புடன் வெளியிடப்பட்டுள்ள பரிசுப்பதிப்பு விலை ரூ. 6,640 என்றாலும், ஜனவரி 31ந்தேதி வரை ரூ. 5000க்கு கிடைக்கும் என்று தமிழ் மண் பதிப்பக அதிபர் இளவழகனார் அறிவித்துள்ளார். ஒவ்வொரு புத்தகத்திலும் பாரதிதாசனின் மாறுபட்ட படங்கள் இடம் பெற்றிருப்பது தனிச்சிறப்பு.
—-
மதிநுட்பக் கதைகள், வாண்டுமாமா, கவிதா பப்ளிகேஷன்ஸ், 8 மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 350ரூ.
67 சிறுகதைகளின் தொகுப்பு நூல். ராஜா ராணிக் கதைகள், மந்திரவாதிக் கதைகள், மர்மக் கதைகள், சிரிக்க வைக்கும் கதைகள், சீரியசான கதைகள், நீதிக் கதைகள், நற்பண்புகள்-நல்ல பழக்க வழக்கங்களை போதிக்கும் கதைகள் என பலவகையான கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை படித்து ரசிக்கலாம். நன்றி: தினத்தந்தி, 16/1/2014.